Monday, May 20, 2024

கீர்த்தனை 371 - இறைவனின் பணியில் இன்றைய உலகில்

 Rev. Dr. Gnanavaram

Rev. Dr. Thomas Thangaraj









































இறைவனின் பணியில்
இன்றைய உலகில்
இறைமக்கள் நாமே
இணைந்திடுவோமே 
 
1. வறுமையின் பிடியில் வாழ்ந்திடும் மனிதர்
வளம் பெற உழைப்போம் வழிகாட்டிடுவோம்
பொறுமையின் வழியில் பிறர்துயர் களைந்தே
புதியதோர் வாழ்வு புலர்ந்திட முனைவோம்
 
2. சமயங்கள் பலவாய் இருந்திடும் உலகில்
சாந்தமாய்ப் பிறரை ஏற்றுமே வாழ்வோம்
இமயமாய் பிரிவினை எழுந்திடும் வேளை
ஏசுவின் பெயரில் இணைந்திட முயல்வோம்
 
3.  சாதியின் கொடுமை ஒழிந்திட உழைப்போம்
சமத்துவ நெறியில் இணைந்துமே வாழ்வோம்
பாதி மனிதராய் ஒடுக்கப்பட்டோரின்
பாடுகள் நீங்க போராடிடுவோம்













































No comments:

Post a Comment