கீர்த்தனை 329 - ஆண்டவா உந்தன் சேவைக்கடியேன்
ஆண்டவா உந்தன்
சேவைக்கடியேன்
அர்ப்பணம் செய்யத் தூண்டும்
உன் ஆவி அருள்வாய்
என்னைத் தியாகிக்க ஏவும்
உன் அனல் மூட்டுவாய்
இந்நிலம் தன்னில் மாளும்
மனுமக்கள் மீட்பிற்காக
1. புசிக்கப் பண்டமில்லாமல்
பூவில் இல்லமுமே அன்றி
நசிந்து நலிந்து நாட்டில்
கசிந்து கண்ணீர் சொரிந்து
தேசமெல்லாம் தியங்கும்
நேசமக்கள் சேவைக்கே
நிமலா எனை ஏற்றுக்கொள்
2. வறுமை வன் கடன் வியாதி
குருட்டாட்டம் கட்சி கடும்
அறிவீனம் அந்தகாரம்
மருள் மூடி மக்கள் வாடும்
தருணம் இக்காலமதால்
குருநாதா உனதன்பை
அருள்வாய் அடியேனுக்கே
3. அருமை ரட்சகா உந்தன்
அரும்பாடு கண்ணீர் தியாகம்
பேரன்பு பாரச் சிலுவை
சருவமும் கண்ட எந்தன்
இருதயம் நைந்துருகி
வெறும் பேச்சாய் நின்றிடாமல்
தருணம் எனையே தந்தேன்
4. உலகே உனதாயினும்
தலைசாய்க்கத் தாவில்லாமல்
நலமே புரிந்து திரிந்தாய்
எல்லாம் துறந்து யான் உன்
நல்லாவி கொண்டுழைக்க
வல்லா உனின் சிலுவை
அல்லால் வழி வேறுண்டோ?
************************************************************************************


No comments:
Post a Comment