Monday, March 31, 2025

கீர்த்தனை 093 - ஏசு கிறிஸ்து நாதர்

 கீர்த்தனை 093 - ஏசு கிறிஸ்து நாதர்




ஏசு கிறிஸ்து நாதர்
எல்லாருக்கும் ரட்சகர்

1.  மாசில்லாத மெய் தேவன்
மானிட ரூபுடையார்
யேசுகிறிஸ்துவென்ற
இனிய நாமமுடையார்

ஏசு கிறிஸ்து நாதர்
எல்லாருக்கும் ரட்சகர்

2. அந்தர வானத்திலும்
அகிலாண்ட கோடியிலும்
எந்தெந்த லோகத்திலும்
இவரிவரே ரட்சகர்

ஏசு கிறிஸ்து நாதர்
எல்லாருக்கும் ரட்சகர்

3. வம்பு நிறைந்த இந்த
வையக மாந்தர்கள் மேல்
அன்பு நிறைந்த கர்த்தர்
அதிக உருக்கமுள்ளோர்

ஏசு கிறிஸ்து நாதர்
எல்லாருக்கும் ரட்சகர்

4. தன்னுயிர் தன்னை விட்டு
சருவ லோகத்திலுள்ள
மன்னுயிர்களை மீட்க
மரித்தே உயிர்த்த கர்த்தர்

ஏசு கிறிஸ்து நாதர்
எல்லாருக்கும் ரட்சகர்

5. பாவத்தில் கோபம் வைப்பார்
பாவி மேல் கோபம் வையார்
ஆவலாய் நம்பும் பாவிக்
கடைக்கலம் ஆக நிற்பார்

ஏசு கிறிஸ்து நாதர்
எல்லாருக்கும் ரட்சகர்

***************************