Saturday, August 15, 2026
கீர்த்தனை 433 - ஆண்டவர் உன்னை ஆசீர்வதித்து
Friday, August 7, 2026
கீர்த்தனை 373 - எளியவர்க்கு சொந்தம் இந்த
கீர்த்தனை 373 - எளியவர்க்கு சொந்தம் இந்த
எளியவர்க்கு சொந்தம் இந்த உலகம் என்று - நம்
இயேசு சொன்ன நல்ல காலம் வருமோ? என்று
ஒளியிழந்து விளங்குதவர் வாழ்வு இன்று - அவர்
உலகை என்று ஆள்வதோ தலை நிமிர்ந்து நின்று
1. இறைவனது இல்லமன்றோ இந்த உலகம் - அதில்
எல்லோர்க்கும் உரிமையுடன் உண்டு இடம்
அறைகளிலே கதவுகளோ எதுவுமில்லை - இங்கு
அன்புடனே வாழ்ந்திருந்தால் மறையும் தொல்லை
2. உள்ளமெனும் சோலையிலே அன்பு மலர்ந்தால் இந்த
உலகத்திலே சம உரிமை மணம் கமழும்
வெள்ளமென இறை அன்பு வழிந்தோடினால் - இங்கு
வறியவர்கள் வாழ்வினிலே வலிமை வரும்
3. தனி மனிதன் திருந்தி விட்டால் போதாது - இந்த
தாரணியே முழுத்திருப்பம் பெற வேண்டும்
இனிமேலே வரும் என்று இருந்திடாதே - இன்றே
எளியவர்கள் உணர்வூக்கம் பெற வேண்டும்
Friday, June 12, 2026
கீர்த்தனை 018 - சருவ வலிமை கிருபைகள்
கீர்த்தனை 018 - சருவ வலிமை கிருபைகள்
Thursday, June 4, 2026
கீர்த்தனை 186 - பக்தியாய் ஜெபம் பண்ணவே
கீர்த்தனை 186 - பக்தியாய் ஜெபம் பண்ணவே
Monday, May 11, 2026
கீர்த்தனை 101 - வரவேணும் பரனாவியே
கீர்த்தனை 101 - வரவேணும் பரனாவியே
Friday, May 1, 2026
கீர்த்தனை 396 - புது வாழ்வு நமக்குப் புதுவாழ்வு
கீர்த்தனை 396 - புது வாழ்வு நமக்குப் புதுவாழ்வு
பெருவாழ்வு
கிறிஸ்து தரும்வாழ்வு
1. பிறந்தவர் இறப்பது பொது மரபு – இங்கு
இறந்தவர்
எழுவதோ புதுச்சிறப்பு
இறைவனின்
திருமகன் உயிர்த்தெழுந்தார் – கொடும்
மரணத்தின்
பிடியினைத் தகர்த்தெறிந்தார்!
2. கல்லறை உலகினில் பல உண்டு – அவை
சொல்லிடும்
கதைகளில் கனிவுண்டு
வல்லவர்
இயேசுவின் கல்லறையோ – அவர்
இல்லையே
என்னிடம் என்றிடுதே!
3. இயேசுவின் உயிர்த்தெழல் பெருநிகழ்ச்சி – அவர்
நேசரின்
வாழ்விலும் வரும் நிகழ்ச்சி
நாசமோ
மோசமோ நமக்கில்லை – விசு
வாசிகள் தமக்கு இறப்பில்லை.
Wednesday, April 15, 2026
கீர்த்தனை 427 - பயணிகள் பாதையில்
கீர்த்தனை 427 - பயணிகள் பாதையில்
Monday, April 6, 2026
கீர்த்தனை 241 - சரணம் சரணம் சரணம் எனக்குன்
கீர்த்தனை 241 - சரணம் சரணம் சரணம் எனக்குன்
Wednesday, March 18, 2026
கீர்த்தனை 170 - என் உள்ளம் கவரும்
கீர்த்தனை 170 - என் உள்ளம் கவரும்
Monday, February 23, 2026
கீர்த்தனை 059 - ஆமென் அல்லேலூயா
கீர்த்தனை 059 - ஆமென் அல்லேலூயா
மகத்துவத்தம்பராபரா
ஆமென் அல்லேலூயா!
ஜெயம்! ஜெயம்! அனந்த தோத்திரா
ஓம் அனாதி தந்தார் வந்தார் இறந்
துயிர்த்தெழுந்தாரே உன்னதமே!
ஆமென் அல்லேலூயா!
1. வெற்றி கொண்டார்ப்பரித்து – கொடும்வே
தாளத்தை சங்கரித்து – முறித்து
பத்ராசனக்கிறிஸ்து – மரித்து
பாடுபட்டுத் தரித்து முடித்தார்
ஆமென் அல்லேலூயா!
மகத்துவத்தம்பராபரா
ஆமென் அல்லேலூயா!
ஜெயம்! ஜெயம்! அனந்த தோத்திரா
2. சாவின் கூர் ஒடிந்து – மடிந்து
தடுப்புச் சுவர் இடிந்து – விழுந்து
ஜீவனே விடிந்து – தேவாலயத்
திரை ரண்டாய்க் கிழிந்து ஒழிந்தது
ஆமென் அல்லேலூயா!
மகத்துவத்தம்பராபரா
ஆமென் அல்லேலூயா!
ஜெயம்! ஜெயம்! அனந்த தோத்திரா
3. வேதம் நிறைவேற்றி – மெய் தோற்றி
மீட்டுக் கரையேற்றி – பொய் மாற்றி
பாவிகளைத் தேற்றி – கொண்டாற்றி
பத்ராசனத் தேற்றி வாழ்வித்தார்
ஆமென் அல்லேலூயா!
மகத்துவத்தம்பராபரா
ஆமென் அல்லேலூயா!
ஜெயம்! ஜெயம்! அனந்த தோத்திரா
***************************
Tuesday, January 27, 2026
கீர்த்தனை 287 - ஓய்வு நாள் இது
கீர்த்தனை 287 - ஓய்வு நாள் இது
ஓய்வுநாள் இது மனமே தேவனின்
உரையைத் தியானம் செய் கவனமே
நேய தந்தையர் சேயர்க் குதவிய
நெறி இச்சுவிசேஷ வசனமே
1. ஜீவ சுகபுத்ர செல்வம் தந்தவர்
சேவடி உனக் கபயமே
மேவி அவர் கிருபாசனத்தின் முன்
வேண்டிக் கொள் இது சமயமே
2. ஆறு நாளுனக்களித்தவர்
இளைப்பாறி ஏழினில் களித்தவர்
கூறும் பூரண ஆசீர்வாதத்தை
குறித்துனை இதற்கழைக்கிறார்
3. கர்த்தர் ஆசனம் குறுகிக் கேள் இன்று
காலை நண்பகல் மாலையும்
சுத்தம் நாடுவோர் யாவரும் வந்து
துதி செய்யும் இத் தேவாலயம்
*****************************************************************
Sunday, January 18, 2026
கீர்த்தனை 252 - ஐயனே இவர்க்காசி
கீர்த்தனை 252 - ஐயனே இவர்க்காசி

Thursday, January 15, 2026
கீர்த்தனை 441 - பாவம் என்னைத் தொடர்ந்தாலும்
கீர்த்தனை 441 - பாவம் என்னைத் தொடர்ந்தாலும்
பாவம் என்னைத் தொடர்ந்தாலும்
இயேசு
தேவா உம்மை மறவேனே
1. செய் பாவம் நினைத்து நான் அழுகின்றேன் – அதை
செய்யாமல் இருந்திட பலமுமில்லை
மெய்யாக உம் துணை வேண்டுமய்யா – எந்தன்
அய்யா நின் பிள்ளை நானல்லவா
பாவம் என்னைத் தொடர்ந்தாலும்
இயேசு
தேவா உம்மை மறவேனே
2. உள்ளத்தில் நல்லலெண்ணம் பல உண்டு – ஆனால்
வெள்ளத்தில் அடிபட்டுச் செல்லுகின்றேன்
உள்ளதை உம்மிடம் சொல்லிவிட்டேன் – எந்தன்
உடலையே உமக்கெனத் தந்துவிட்டேன்
பாவம் என்னைத் தொடர்ந்தாலும்
இயேசு
தேவா உம்மை மறவேனே
3. மன்னவா உம்மிடம் ஓடி வந்தேன் – பாவ
மன்னிப்பு உண்டென நம்பி வந்தேன்
மன்னிப்பு வழங்கினால் போதாது – என்னை
மாற்றாமல் போய்விடில் வாழ்வேது
பாவம் என்னைத் தொடர்ந்தாலும்
இயேசு
தேவா உம்மை மறவேனே














