Friday, August 16, 2024

கீர்த்தனை 258 - தாரகமே பசி தாகத்துடன்

கீர்த்தனை 258 - தாரகமே பசி தாகத்துடன்





தாரகமே பசிதாகத்துடன் உம்மிடம்
வேகத்துடனே வாறேன்
தாரகமே பசிதாகத்துடன் உம்மிடம்
வேகத்துடனே வாறேன்
சீரும் செல்வமும் பெற்றுத் தேறும்படிக் கென்னிடம்
சீரும் செல்வமும் பெற்றுத் தேறும்படிக் கென்னிடம்
சேரும் யாரையும் ஒரு போதும் தள்ளிடே னென்றீர்

1. பாவமகலத் தேவ கோபமது ஒழியப்
பாடுபட்டுயிர் விடுத்தீர் - பின்னும்
ஜீவ போஜன மெனக்கீய உமையே அந்த
சிலுவைதனிலே பகுத்தீர்
மேவியெனை நெருக்கித் தாவும் பவத்தைக் கொன்று
மேவியெனை நெருக்கித் தாவும் பவத்தைக் கொன்று
சேவித் துயிர் பிழைக்க தேவே உமையுட் கொள்ள

தாரகமே பசிதாகத்துடன் உம்மிடம்
வேகத்துடனே வாறேன்

2. காணாதொழிந்த ஆடு வீணாய்ப் போகாமல் அதை
கண்டுபிடித்தி ரட்சித்தீர் - அது
பேணுதலுடன் பரிபூரண மடைந்திடப்
பேருல குதித்தே னென்றீர்
வேணுமுமது நீதி பூண நிறைவா யுந்தன்
வேணுமுமது நீதி பூண நிறைவா யுந்தன்
மாணருளுந் திருப்தி யானே பெற உம்மிடம்

தாரகமே பசிதாகத்துடன் உம்மிடம்
வேகத்துடனே வாறேன்

3. தந்த திருவசனம் உந்தம் இராப்போஜனம்
தகமை எத்தனமாமே  - யான்
சிந்தை பணிந்தவற்றை எந்தன் மனதுட்கொள்ள
தேவசுத்தாவி தாமே
உந்தம் தசையுதிர விந்தை விருந்தினை யான்
சந்ததமுண்டு துதி சாற்ற அருள் செய்வீரே


தாரகமே பசிதாகத்துடன் உம்மிடம்
வேகத்துடனே வாறேன்




கீர்த்தனை 255 - கர்த்தரின் பந்தியில் வா

கீர்த்தனை 255 - கர்த்தரின் பந்தியில் வா



கர்த்தரின் பந்தியில் வா – சகோதரா
கர்த்தரின் பந்தியில் வா
கர்த்தரின் பந்தியில் வா
 
கர்த்தர் அன்பாய்ச் சொந்த ரத்தத்தைச் சிந்தின
காரணத்தை மனப் பூரணமாய் எண்ணி 

கர்த்தரின் பந்தியில் வா – சகோதரா
கர்த்தரின் பந்தியில் வா
கர்த்தரின் பந்தியில் வா
 
1. ஜீவ அப்பம் அல்லோ? – கிறிஸ்துவின் திருச் சரீரம் அல்லோ?
பாவ மனங் கல்லோ? – உனக்காய்ப் பகிரப்பட்ட தல்லோ?
தேவ குமாரனாம் ஜீவ அப்பத்தை நீ
தின்று அவருடன் என்றும் பிழைத்திட 

கர்த்தரின் பந்தியில் வா – சகோதரா
கர்த்தரின் பந்தியில் வா
கர்த்தரின் பந்தியில் வா
 
2. தேவ அன்பைப் பாரு – கிறிஸ்துவின் சீஷர் குறை தீரு
பாவக் கேட்டைக் கூறு – ராப்போஜன பந்திதனில் சேரு
சாவுக்குரிய மா பாவமுள்ள லோகம்
தன்னில் மனம் வைத்து அன்னியன் ஆகாதே 

கர்த்தரின் பந்தியில் வா – சகோதரா
கர்த்தரின் பந்தியில் வா
கர்த்தரின் பந்தியில் வா
 
 3. அன்பின் விருந்தாமே – கர்த்தருடன் ஐக்யப் பந்தியாமே
துன்பம் துயர் போமே .. இருதயம் சுத்த திடனாமே
இன்பம் மிகும் தேவ அன்பின் விருந்துக்கு
ஏது தாமதமும் இல்லாதிப்போதே வா 

கர்த்தரின் பந்தியில் வா – சகோதரா
கர்த்தரின் பந்தியில் வா
கர்த்தரின் பந்தியில் வா

கீர்த்தனை 251 - ஞானஸ்நான மா ஞான திரவியமே

 கீர்த்தனை 251 - ஞானஸ்நான மா ஞான திரவியமே



ஞானஸ்நான மா ஞானத்திரவியமே
திரு நாமம் நீரோடு சேர்

1. வானபரன் யேசுலக மானிடர்க்காய்ப் பாடுபட்டு
வாய்த்தநலம் இலவசமாய்க் கொடுத்திட
ஞானமுட னேசகல மானிடரைச் சீடராக்க
நல்ல தேவ நாமமதை சொல்லி ஜலம் வாருமென்ற 

ஞானஸ்நான மா ஞானத்திரவியமே
திரு நாமம் நீரோடு சேர்

2.          தண்ணீராவியால் பிறவார் விண்ணகம் பெறாரெனவே
சத்தியன் உரைத்தமொழி சுத்தமுணர்ந்து
சின்னவர் பெரியவர்கள் சீரியர்கள்பூரியர்கள்
செம்மைபெற மூழ்குவர்கள் இம்முழுக்கில் வேதமுறை 

ஞானஸ்நான மா ஞானத்திரவியமே
திரு நாமம் நீரோடு சேர்

3.          கண்ணினாலே காண்பதென்ன? தண்ணீர்தானேயென்று சொல்லிக்
கர்த்தனி னுரைமறப்ப தெத்தனை மோசம்!
அண்ணலார் பரிசுத்தாவி தன்னையுமிணைக்கு நேர்மை
அறிந்தவரே யிருகண் தெரிந்தவர் திருவருள் 

ஞானஸ்நான மா ஞானத்திரவியமே
திரு நாமம் நீரோடு சேர்

********************************************************************************






கீர்த்தனை 109 - காலத்தின் அருமையை

 கீர்த்தனை 109 - காலத்தின் அருமையை


காலத்தின் அருமையை (KARAOKE)



காலத்தின் அருமையை அறிந்து வாழாவிடில்
கண்ணீர் விடுவாயே

ஞாலத்தில் பரனுனை நாட்டின நோக்கத்தை
சீலமாய் நினைத்தவர் மூலம் பிழைத்திடுவாய்

காலத்தின் அருமையை அறிந்து வாழாவிடில்
கண்ணீர் விடுவாயே

1. மதியை இழந்து தீய வழியிலே நீ நடந்தால்
வருங்கோபம் அறிந்திடாயோ?
கதியாம் ரட்சண்ய வாழ்வைக் கண்டு நீ மகிழ்ந்திட
காலம் இதுவே நல்ல காலம் என்றறியாயோ? 

காலத்தின் அருமையை அறிந்து வாழாவிடில்
கண்ணீர் விடுவாயே

2. நோவாவின் காலத்தில் நூற்றிருபது ஆண்டு
நோக்கிப் பின் அழித்தாரன்றோ?
தாவாத கிருபையால் தாங்கி உனக்களித்த
தவணையின் காலமிவ் வருட முடியலாமே!

காலத்தின் அருமையை அறிந்து வாழாவிடில்
கண்ணீர் விடுவாயே

3. முந்தி எரேமியா அனனியாவுக்குரைத்த
முடிவை நீ அறியாயோ?
எந்தக் காலமும் சிரஞ்சீவியென்றெண்ணிடாமல்
ஏற்ற ஆயத்தமாய் எப்போதும் இருந்திடாயோ? 

காலத்தின் அருமையை அறிந்து வாழாவிடில்
கண்ணீர் விடுவாயே

4. இகத்தினில் ஊழியம் அகத்தியம் நிறைவேற
ஏசுனை அழைத்தாரல்லோ?
மகத்துவ வேலையை மறந்து தூங்குவாயானால்
பகற்கால முடியும் ராக்காலத்திலென்ன செய்வாய்?

காலத்தின் அருமையை அறிந்து வாழாவிடில்
கண்ணீர் விடுவாயே
ஞாலத்தில் பரனுனை நாட்டினநோக்கத்தை
சீலமாய் நினைத்தவர் மூலம் பிழைத்திடுவாய்

காலத்தின் அருமையை அறிந்து வாழாவிடில்
கண்ணீர் விடுவாயே





கீர்த்தனை 238 - சேனைகளின் கர்த்தரே நின்

 கீர்த்தனை 238 - சேனைகளின் கர்த்தரே நின்








சேனைகளின் கர்த்தரே நின்
திருவிலம் அளவற இனிதினிதே

வான வானங்கள் கொள்ளாத 
ஈன ஆன்மாவைத் தள்ளாத
சேனைகளின் கர்த்தரே நின்
திருவிலம் அளவற இனிதினிதே

1. திருவருளிலமே கணுறும் உணரும்
தெருளம்பகமே இனிதுறும் நிசமிது
சேனைகளின் கர்த்தரே நின்
திருவிலம் அளவற இனிதினிதே

2. ஈண்டடியார் கேட்டிடும் நின்வசனமினிதே இனிதே
இகபர நலமொளிர் இதமிகு பெயருள
எமதரசெனும் நய
சேனைகளின் கர்த்தரே நின்
திருவிலம் அளவற இனிதினிதே

3. புவியோர் பதிவான் புகநிதியே
புனருயி ருறுமுழுக் கருளினிதே
புதுவிடமே புகுமனமே புதுமதியே
புரிவொடு இனிதருள்
சேனைகளின் கர்த்தரே நின்
திருவிலம் அளவற இனிதினிதே

4. பேயொடே புவி பேதை மாமிசம்
பேணிடா தடியாருனைப்
பேறு தந்தவனே யெனச் சொலி
பேணிடத் துணை ஈவையே
பேசருமுன்னந்தம் பேதைகளின் சொந்தம் பேதமிலானந்தம்
பிசகொழியே திடமளியே
பெருமலையினிலரு முயிர்தரும்
சேனைகளின் கர்த்தரே நின்
திருவிலம் அளவற இனிதினிதே

5. ஆலய மது நிறைவாக
அவைக் குறை வொழிந்தேக
அவரவருனதில மெனமன விடர்சாக
அருளும் பொருளும் தெருளும் செறிந்திடும்
ஆலய பரனேச
ஆசுக மது வீச
ஆரண மொழி பேச
ஆ புது எருசலையாம்
ஆலய மொரு நிலையாம்
அது நிகரெது?

சேனைகளின் கர்த்தரே நின்
திருவிலம் அளவற இனிதினிதே

வான வானங்கள் கொள்ளாத 
ஈன ஆன்மாவைத் தள்ளாத

சேனைகளின் கர்த்தரே நின்
திருவிலம் அளவற இனிதினிதே
*******************