Monday, December 15, 2025

கீர்த்தனை 325 - வாரும் பெத்லகேம் வாரும்

கீர்த்தனை 325 - வாரும் பெத்லகேம் வாரும்


1. வாரும் பெத்லெகேம் வாரும் வாரும்
வரிசையுடனே வாரும்
வாரும் எல்லோரும் போய் வாழ்த்துவோம் யேசுவை
வாரும் விரைந்து வாரும்

2. எட்டி நடந்து வாரும் அதோ
ஏறிட்டு நீர் பாரும்
பட்டணம்போல் சிறு பெத்லெகேம் தெரியுது
பாரும் மகிழ்ந்து பாரும்

3. ஆதியிலத மேவை அந்நாள்
அருந்திய பாவவினை
ஆ திரிதத்துவ தேவன் 
மனிதத்துவமாயினர் இது புதுமை

4. விண்ணுலகாதிபதி தீர்க்கர்
விளம்பின சொற்படிக்கு
மண்ணுலகில் மரிகன்னி வயிற்றினில்
மானிடனா யுதித்தார்

5. சொல்லுதற் கரிதாமே ஜோதி
சுந்தர சோபனமே
புல்லணையிற் பசுமுன்னணையிற்பதி
பூபதிதான் பிறந்தார்

6. மந்தை மாடடையில் மாது
மரியவள் மடியதனில்
கந்தைத் துணியதை விந்தைத் திருமகன்
காரணமாய் அணிந்தார்

7. தூதர் பறந்துவந்து தேவ
துந்துமி மகிழ்பாட
மாதவ ஞானிகள் ஆயர்கள் பணிந்து
மங்களமொடு நாட
******************************



 

Monday, December 1, 2025

கீர்த்தனை 033 - ஆ! அம்பர உம்பரமும்

 கீர்த்தனை 033 - ஆ! அம்பர உம்பரமும்


ஆ! அம்பர உம்பர மும் புகழும்திரு
ஆதிபன் பிறந்தார்

ஆதிபன் பிறந்தார் – அமலாதிபன் பிறந்தார் 

1. அன்பான பரனே! அருள் மேவும் காரணனே! – நவ
அச்சய சச்சித ரட்சகனாகிய
உச்சிதவரனே! 

2. ஆதம் பாவமற நீதம் நிறைவேற – அன்று
அல்லிராவினில் தொல்லையிடையினில்
புல்லணையில் பிறந்தார் 

3. ஞானியர் தேட வானவர் பாட – மிக
நன்னய உன்னத பன்னரும் ஏசையா
இந்நிலம் பிறந்தார் 

4. கோனவர் நாட தானவர் கொண்டாட – என்று
கோத்திரர் தோத்திரம் சாற்றிடவே யூத
கோத்திரன் பிறந்தார் 

5. விண்ணுடு தோண மன்னவர் பேண – ஏரோது
மைந்தனின் சிந்தையழுந்திக் கலங்கிட
விந்தையாய்ப் பிறந்தார் 
**********



கீர்த்தனை 030 - பெத்தலகேம் ஊரோரம்

 கீர்த்தனை 030 - பெத்தலகேம் ஊரோரம்



1. பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடி
கர்த்தன் ஏசு பாலனுக்குத் துத்தியங்கள் பாடி
பக்தியுடன் இத்தினம் வா ஓடி..ஓடி..!
பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடி

2. எல்லையில்லா ஞானபரன் வெல்லைமலையோரம் 
புல்லணையிலே பிறந்தார் இல்லமெங்கும் ஈரம் 
தொல்லை மிகும் அவ்விருட்டு நேரம்….நேரம்….!
பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடி

3. வான் புவி வாழ் ராஜனுக்கு மாட்டகந்தான் வீடோ? 
வானவர்க்கு வாய்த்த மெத்தை வாடின புல் பூடோ? 
ஆன பழங் கந்தை என்ன பாடோ? பாடோ…!
பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடி

4. அந்தரத்தில் பாடுகின்றார் தூதர் சேனை கூடி 
மந்தை ஆயர் ஓடுகின்றார் பாடல் கேட்கத் தேடி
இன்றிரவில் என்ன இந்த மோடி…மோடி…!
பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடி

5. ஆட்டிடையர் அஞ்சுகிறார் அவர் மகிமை கண்டு 
அட்டியின்றி காபிரியேல் சொன்ன செய்தி கொண்டு
நாட்டமுடன் இரட்சகரை கண்டு…கண்டு…. !
பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடி


கீர்த்தனை 066 - எனது கர்த்தரின் ராஜரீக நாள்

 கீர்த்தனை 066 -எனது கர்த்தரின் ராஜரீக நாள்


எனது கர்த்தரின் ராஜரீக நாள்
எப்போ வருகுமோ?
ஏங்கும் என் கலி நீங்க மகிழ்ச்சி
எப்போ பெருகுமோ?

 

மனிதசுதனின் அடையாளம்

விண்ணில் காணும் என்றாரே
வல்லமையோடு மகிமையாய்த் தோன்றி

வருவேன் என்றாரே

 

1. தேவ தூதரின் கடைசி எக்காளம் தொனி முழங்கவே,
ஜெகத்தில் ஏசுவைப் பற்றி மரித்தோர் உயிர்த்தெழும்பவே,
ஜீவனுள்ளோரும் அவருடன் மறு ரூபமாகவே,
ஜெகத்தில் பக்தர்கள் கர்த்தரிடத்துக் கெழுந்து போகவே

 

2. தூதர் எக்காளத் தொனியில் என்னிடம் சேர்ப்பேன் என்றாரே
சோதனை காலந்தனில் தப்பவுன்னைக் காப்பேன் என்றாரே
பாதக மனுஜாதி வேதனை அடையும் என்றாரே
பாவ மனுன் தோன்றி நாசமாய்ப் போவான் என்றாரே

 

3. எருசலேமிலிருந்து ஜீவ நதிகள் ஓடுமே
ஏழைகள் மனமகிழ்ந்து கர்த்தரை த்திப் பாடுமே
வருஷமாயிரம் அளவும் பூமியில் பலன்கள் நீடுமே
வானராஜ்ஜி சேனைகள் யாவும் வந்து கூடுமே

 

4. சஞ்சலங்களும் தவிப்புகள் யாவும் ஓடிப் போகுமே
சந்தோஷத்தோடு மகிழ்ச்சியும் வந்து சார்ந்து பிடிக்குமே
நெஞ்ச மகிழ்ந்து நீதிமான்களின் வாய் துதிக்குமே
நித்திய ஜீவனைப் பெற ந்தன் மனம் துடிக்குமே