Tuesday, April 22, 2025

கீர்த்தனை 323 - வானோர் பூவோர் கொண்டாட

கீர்த்தனை 323 - வானோர் பூவோர் கொண்டாட


**********
Stanzas 1,2,4&6
**********



வானோர் பூவோர் கொண்டாட
மனுவேலுயிரோ டெழுந்தார் ஜெயமே

தீனதயாளன் திருமறைநூலன்

திரிபுவனங்களாள் செங்கோலன்

(மூவுலகை ஆளும் நீதியரசன்)


ஞானசு சீலன் நரரனுகூலன்

நடுவிடவே வருபூபாலன்

(திரித்துவத்தில் நடுவரான மணமகன் இயேசு)


1. அலகையை ஜெயித்தார் அருள்மறை முடித்தார்

அருலமலர்க்கா காவலை ஒழித்தார்

நிலைதிரை (தேவாலயத் திரைச்சீலை) கிழித்தார்

தடைச்சுவரிடித்தார் (பாவமெனும் தடுப்புச்சுவர்)

நேராய்த் தரிசனந்தர விடுத்தார்

 

2. செத்தோ ருயிர்த்தார் திருநகர் பூத்தார்*

தேடற் கரியதோர் காட்சிவைத்தார்

மற்றோர் பார்த்தார் மலைவுகள் தீர்த்தார்

மரித்தோர் முதற்பலனாய் செழித்தார்

 

*மரித்த பரிசுத்தவான்கள் உயிர்த்தெழுந்து எருசலேமில் காணப்பட்டனர்.  (மத்தேயு 27: 52, 53)


3. அடியவர் கண்டார் ஆர்துயர் விண்டார்
அருமறைக் கருத்தாய்ந்தே நின்றார்
மடமையகன்றார் மயக்கமே கொன்றார்
வானானந்தமே மனங்கொண்டார்

4. மகதலனாளு மதி சூசன்னாளும்
மயங்கியழுத யோ வன்னாளும்
மகவிருவர் தருசா லொமித்தாயும்
மரை மலரடிதொழு தேத்தினரே

5.  எம்மாவூர் சீடரி ருவர்க்குந் தோமா
இலதுபதின் மருக்குமே காட்சி
நன் மனதுடனே பதினொருவருக்கும்
நடுவகத்தே வருமாசூட்சி

6.  மகதலனாட்கு மற்ற மங்கையர்க்கும்
மகத்துவத்தே தரிசன மளித்தார்
பேதுரு தனித்தும் யாக்கோபு தனித்தும்
பிரத்தியேகத்தில் தரிசித்தனரே

7. கலிலே யாக்கடலில் எழுவரும் பார்த்தார்
காட்சி மலையஞ் ஞூறுபேர் பார்த்தார்
உலை எருசலமில் சீடரைச் சேர்த்தார்
ஒலிவ மலைமேல் திரள்பேர் பார்த்தார்.

Tuesday, April 15, 2025

கீர்த்தனை 228 – உந்தன் திருப்பணியை

கீர்த்தனை 228 – உந்தன் திருப்பணியை





உந்தன் திருப்பணியை உறுதியுடன் புரிய
உதவாத பாவி நானே
 
அந்தகாரமே நின்றுன் அருணோதயமே கண்டு
வந்த நாள் முதற்கொண்டு வைத்தாய் எனக்குன் தொண்டு
 
1. வேதனத்தின் (சம்பளம்) பொருட்டோ, மேலவர் நிமித்தமே
வெளியிட் டறிக்கை செய்யவோ? - உல
காதாயம் சுயநயம் அகிலத்துரிய புகழ்
அடைந்து ப்ரகாசிக்கவோ?
ஓதிக்காலங் கழிக்க உலகாவி அடைந்தவன்
நீதிக்கெனை பலியாய் நேர்ந்துகொண்டுழைக்கேனோ?
 
2. வேனல் குளிரைக் கண்டு மேனி மிகவெருண்டு
வெளியேறா தகம் துஞ்சினேன் வேளைப்
பான முணவுபிந்த பலபிணி வருமென்ற
பயத்தாலே நித மஞ்சினேன்
கானகம் மலைசென்று கடும்பனி குளிர் வென்று
போனகம் (உணவு) நீரகன்று புவியிலுழைத்த யேசு
 
3.  காடோ மலைநதியோ கடலோ கடந்தலுத்துக்
கஸ்தி மிகவே அடைந்து உடல்
பாடும் கவலை நோயும் பசியும் நிர்வாணமும்
பகைவர் திருடர் மோசமும்
சாடக்கிறிஸ்துவுக்குத் தகுந்த பானபலியாய்
ஓடத்தனை (உடல்) யொப்பித்தோன் உறுதி யெனக்கில்லையே
 
4.  வண்டி வகைகளோடு வாழ்ந்தும் எனது கூடு
மயங்கி அயர்ந்து வாடுதே இனி
என்று மிருப்பிடத்தில் இருந்து பணி புரிய
இசைந்தென் மனது நாடுதே
ஒன்றும் உதவியின்று ஊரே அலைந்து சென்று
நன்றே நிதம் புரிந்த நரனே பரனே யேசு   
**************************************************


Monday, April 14, 2025

கீர்த்தனை 263 - யேசுவே திருச்சபை ஆலயத்தின்

கீர்த்தனை 263 - யேசுவே திருச்சபை ஆலயத்தின்


 





யேசுவே திருச்சபை ஆலயத்தின்
என்றும் நிலைக்கும் மூலைக்கல்.
என்றும் நிலைக்கும் மூலைக்கல்.

பேசற் கரிய மூலைக்கல் அவர்
பெரும் மாளிகையைத் தாங்கும் கல். 

பேசற் கரிய மூலைக்கல் அவர்
பெரும் மாளிகையைத் தாங்கும் கல்.

1. ஆகாதிதென்று வீடு கட்டுவோர்
அவமதித்திட்ட இந்த கல்;
அவமதித்திட்ட இந்த கல்;
வாகாய் ஆலய மூலைக் கமைந்து
வடிவாய்த் தலைக்கல்லான கல். 
வாகாய் ஆலய மூலைக் கமைந்து
வடிவாய்த் தலைக்கல்லான கல். 

2. ஆலயமெல்லாம் இசைவாய் இணைக்கும்
அதிசயமான அன்பின் கல்;
அதிசயமான அன்பின் கல்;
ஞாலத்துப் பல ஜாதிகள் தமை
நட்புற ஒன்றாய்ச் சேர்க்கும் கல். 
ஞாலத்துப் பல ஜாதிகள் தமை
நட்புற ஒன்றாய்ச் சேர்க்கும் கல். 

3. ஒப்பில்லா அரும் மாட்சிமை யுறும்
உன்னத விலைபெற்ற கல்;
உன்னத விலைபெற்ற கல்;
எப்போதும் பரஞ்ஜோதியாய் நீதி
இலங்கும் சூரியனான கல். 
எப்போதும் பரஞ்ஜோதியாய் நீதி
இலங்கும் சூரியனான கல். 

4. காற்றுக்கும் கன மழைக்கும் அசையா
கடிய மாபலமான கல்;
கடிய மாபலமான கல்;
மாற்றிக் கலியை ஆற்றித் துயரைத்
தேற்றி சபையைக் காக்குங் கல். 
மாற்றிக் கலியை ஆற்றித் துயரைத்
தேற்றி சபையைக் காக்குங் கல். 

5. என்றும் கட்டுவோம் இந்த ஆலயத்தை,
எழிலுறவே இக் கல்லின்மேல்;
எழிலுறவே இக் கல்லின்மேல்;
நன்றாய் இக்கல்லில் நம்பிக்கை வைப்போன்
நாணம் அடையான் மெய்தானே. 
நன்றாய் இக்கல்லில் நம்பிக்கை வைப்போன்
நாணம் அடையான் மெய்தானே. 

யேசுவே திருச்சபை ஆலயத்தின்
என்றும் நிலைக்கும் மூலைக்கல்.
என்றும் நிலைக்கும் மூலைக்கல்.

பேசற் கரிய மூலைக்கல் அவர்
பெரும் மாளிகையைத் தாங்கும் கல். 

பேசற் கரிய மூலைக்கல் அவர்
பெரும் மாளிகையைத் தாங்கும் கல்.