Monday, June 17, 2024

கீர்த்தனை 426 - உயிர்த்தெழுந்தவா

கீர்த்தனை 426 - உயிர்த்தெழுந்தவா

பாடல் : எஸ். இஸ்ரவேல்























*********************

உயிர்த்தெழுந்தவா உடன் வருபவா
எங்கள் பந்தியில் எழுந்தருளவா

1
உலகைத் தந்தவா
உடலை தந்தவா
உயிரைத் தந்தவா
உணவைத் தந்தவா

2
உறவைத் தந்தவா
உரிமை தந்தவா
உறவை இழந்தும்
உணர்வில் நின்றவா


3
உண்மை உலகே
உருவில் இலங்க
உந்தன் உடலே
உருகச் செய்தவா


4
உயிரோடெழுந்தே
உலகை வென்றவா
உயிருக்குயிராய்
உள்ளுறைபவா


5
உந்தன் உடலாய்
உடையும் அப்பத்தை
உம் உதிரமாய்
ஊற்றும் இரசத்தை


6
உம் உணவினால்
எம் கண் திறந்தே
உம் போல் என்றுமே
உலகைக் காணுவோம்

 


Monday, June 3, 2024

கீர்த்தனை 370 - இயேசுவை வாழ்க்கையில் காட்டுங்களே

 கீர்த்தனை 370 - இயேசுவை வாழ்க்கையில் காட்டுங்களே



இயேசுவை வாழ்க்கையில் காட்டுங்களே
பேச்சில் அல்ல செயலில் நல்ல
இயேசுவை வாழ்வோராய் காட்டுங்களே

1. ஆலயம் அருளுரை போதாதே
ஆசரிப்புகளும் போதாதே
ஆண்டவர் தொழுவத்தின் வெளியிலுள்ளார்
ஆடுகள் தேடியே ஆவல் கொண்டே

இயேசுவை வாழ்க்கையில் காட்டுங்களே
பேச்சில் அல்ல செயலில் நல்ல
இயேசுவை வாழ்வோராய் காட்டுங்களே

2. பரவச மொழிவரம் போதாதே
கரகோஷ ஆட்டமும் போதாதே
பரமனின் திருவுளம் அமர்ந்தறிந்தே
பரிசுத்த ஆவியை சுமந்து கொண்டே

இயேசுவை வாழ்க்கையில் காட்டுங்களே
பேச்சில் அல்ல செயலில் நல்ல
இயேசுவை வாழ்வோராய் காட்டுங்களே

3. வாய் சொல்லால் நேசித்தல் மா எளிதாம்
வாய்மை செயலுள்ளோர் நல் அன்பராம்
உன்னதர் இயேசுவின் அரசுயர
ஒளி உப்பாய் உலகினில் இலங்கிடுவோம்          

இயேசுவை வாழ்க்கையில் காட்டுங்களே
பேச்சில் அல்ல செயலில் நல்ல
இயேசுவை வாழ்வோராய் காட்டுங்களே