Saturday, August 15, 2026

கீர்த்தனை 433 - ஆண்டவர் உன்னை ஆசீர்வதித்து

 கீர்த்தனை 433 - ஆண்டவர் உன்னை ஆசீர்வதித்து



ஆண்டவர் உன்னை ஆசீர்வதித்து
அன்பின் சிறகில் காப்பாராக
ஆண்டவர் முகமுனில் ஒளிரச் செய்து
அமைதியருளி ஆள்வாராக

1. ஆபிராம் போன்றே அனைவருக்கும்
ஆசீர்வாதமாய் அமைந்திடுவாய்
ஆபிராம் போன்றே அனைவருக்கும்
ஆசீர்வாதமாய் அமைந்திடுவாய்
மாபிரதானம் மாண்புறுதானம்
மாநில மீதில் நீ சமாதானம்

ஆண்டவர் உன்னை ஆசீர்வதித்து
அன்பின் சிறகில் காப்பாராக
ஆண்டவர் முகமுனில் ஒளிரச் செய்து
அமைதியருளி ஆள்வாராக

2.  'ஆசி பொழியேல் அகலவிடேன்'
ஆவலின் ஏங்கல் அருள்வேண்டல்
'ஆசி பொழியேல் அகலவிடேன்'
ஆவலின் ஏங்கல் அருள்வேண்டல்
ஆசியடைந்த யாக்கோபு மீண்டும்
அன்பாய் ஏசாவுடன் இணையச் செய்த

ஆண்டவர் உன்னை ஆசீர்வதித்து
அன்பின் சிறகில் காப்பாராக
ஆண்டவர் முகமுனில் ஒளிரச் செய்து
அமைதியருளி ஆள்வாராக

3.  பெண்களுள் மரியாள் ஆசி பெற்றாள்
பெண்குல மேன்மை அவள் ஈந்தாள்
பெண்களுள் மரியாள் ஆசி பெற்றாள்
பெண்குல மேன்மை அவள் ஈந்தாள்
எண்ணரும் பாடு இன்னல்கள் நேர்ந்தும்
எண்ணியே இறையுளம் இசைந்தது போல்

ஆண்டவர் உன்னை ஆசீர்வதித்து
அன்பின் சிறகில் காப்பாராக
ஆண்டவர் முகமுனில் ஒளிரச் செய்து
அமைதியருளி ஆள்வாராக

4. 'இந்தச் சிறியோர்க் கெதைத் தரினும்
எனக்கே தருவீர்' எனும் இயேசு
'இந்தச் சிறியோர்க் கெதைத் தரினும்
எனக்கே தருவீர்' எனும் இயேசு
'எந்தையால் ஆசி பெற்றோரே வாரீர்'
என்றதும் வலதிட மகிழ்வேற்பாய்

ஆண்டவர் உன்னை ஆசீர்வதித்து
அன்பின் சிறகில் காப்பாராக
ஆண்டவர் முகமுனில் ஒளிரச் செய்து
அமைதியருளி ஆள்வாராக



Friday, August 7, 2026

கீர்த்தனை 373 - எளியவர்க்கு சொந்தம் இந்த

 கீர்த்தனை 373 - எளியவர்க்கு சொந்தம் இந்த




எளியவர்க்கு சொந்தம் இந்த உலகம் என்று - நம்

இயேசு சொன்ன நல்ல காலம் வருமோ? என்று


ஒளியிழந்து விளங்குதவர் வாழ்வு இன்று - அவர்

உலகை என்று ஆள்வதோ தலை நிமிர்ந்து நின்று


1.  இறைவனது இல்லமன்றோ இந்த உலகம் - அதில்

எல்லோர்க்கும் உரிமையுடன் உண்டு இடம்

அறைகளிலே கதவுகளோ எதுவுமில்லை - இங்கு

அன்புடனே வாழ்ந்திருந்தால் மறையும் தொல்லை


2.         உள்ளமெனும் சோலையிலே அன்பு மலர்ந்தால் இந்த

உலகத்திலே சம உரிமை மணம் கமழும்

வெள்ளமென இறை அன்பு வழிந்தோடினால் - இங்கு

வறியவர்கள் வாழ்வினிலே வலிமை வரும்


3.         தனி மனிதன் திருந்தி விட்டால் போதாது - இந்த

தாரணியே முழுத்திருப்பம் பெற வேண்டும்

இனிமேலே வரும் என்று இருந்திடாதே - இன்றே

எளியவர்கள் உணர்வூக்கம் பெற வேண்டும்


Friday, June 12, 2026

கீர்த்தனை 018 - சருவ வலிமை கிருபைகள்

 கீர்த்தனை 018 - சருவ வலிமை கிருபைகள்



1. சருவ வலிமை கிருபைகள் மிகுந்த சருவேசா
தரிசனம் பெற உன் சன்னிதி புகுந்தேன் திருவாசா
தரிசனம் பெற உன் சன்னிதி புகுந்தேன் திருவாசா

2. தூய சிந்தை உண்மையில் உனையே தொழுதேத்த
தூய ஆவி கொண்டெனை நிரப்பும் ஜெகதீசா
தூய ஆவி கொண்டெனை நிரப்பும் ஜெகதீசா

3. இருதயத்தைச் சிதற விடாமல் ஒரு நேராய்
இசைத்தமைத்துப் பரவசமாக்கும் நசரேயா
இசைத்தமைத்துப் பரவசமாக்கும் நசரேயா

4. அருளின் வாக்கைக் கருத்துடன் கேட்டு அகத்தேற்று
அறுபது நூறு மடங்காய்ப் பெருக அருளீசா
அறுபது நூறு மடங்காய்ப் பெருக அருளீசா

சருவ வலிமை கிருபைகள் மிகுந்த சருவேசா
தரிசனம் பெற உன் சன்னிதி புகுந்தேன் திருவாசா





Thursday, June 4, 2026

கீர்த்தனை 186 - பக்தியாய் ஜெபம் பண்ணவே

 கீர்த்தனை 186 - பக்தியாய் ஜெபம் பண்ணவே



1. பக்தியாய் ஜெபம் பண்ணவே
சுத்தமாய்த் தெரியாதய்யா
புத்தியோடுமைப் போற்ற நல்
சித்தம் ஈந்திடும் யேசுவே

பக்தியாய் ஜெபம் பண்ணவே
சுத்தமாய்த் தெரியாதய்யா

2. பாவ பாதையை விட்டு நான்
ஜீவ பாதையில் சேர நல்
ஆவி தந்தெனை ஆட்கொள்ளும்
தேவ தேவ குமாரனே

பக்தியாய் ஜெபம் பண்ணவே
சுத்தமாய்த் தெரியாதய்யா

3. பொய்யும் வஞ்சமும் போக்கியே
மெய்யும் அன்பும் விடாமல் யான்
தெய்வமே உனைச் சேவித்திங்கு
உய்யும் நல்வரம் உதவுவாய்

பக்தியாய் ஜெபம் பண்ணவே
சுத்தமாய்த் தெரியாதய்யா

4. அப்பனே உனதன்பினுக்
கெப்படிப் பதில் ஈட்டுவேன்?
செப்பும் என்னிதயத்தையே
ஒப்படைத்தனன் உன்னதே

பக்தியாய் ஜெபம் பண்ணவே
சுத்தமாய்த் தெரியாதய்யா

5. சிறுவன் நானுனை செவ்வையாய்
அறியவும் முழு அன்பினால்
நிறையுமுள்ள நிலைக்கவும்
இறைவனே வரம் ஈகுவாய்

பக்தியாய் ஜெபம் பண்ணவே
சுத்தமாய்த் தெரியாதய்யா

6. அண்ணலே உனதாலயம்
நண்ணி நல்லுணர்வோடு உனை
எண்ணியெண்ணி இறைஞ்ச உன்
கண்ணில் இன்னருள் காட்டுவாய்

பக்தியாய் ஜெபம் பண்ணவே
சுத்தமாய்த் தெரியாதய்யா
புத்தியோடுமைப் போற்ற நல்
சித்தம் ஈந்திடும் யேசுவே





Monday, May 11, 2026

கீர்த்தனை 101 - வரவேணும் பரனாவியே

 கீர்த்தனை 101 - வரவேணும் பரனாவியே


வரவேணும் பரனாவியே
இலங்கும் சுடராய் மேவியே

மருளாம் (மயக்கும்) பாவம் மருவிய (தழுவிய) எனக்கு
வானாக்கினியால் ஞான தீட்சை தர

1. பலமான எப்பாவமும் பாழாக்கும் மா நோய்களும்
வலிய கொடும் ரோகமும் (வியாதியும்) மாம்ச சிந்தை ஓடுமே
பலிபீடத்தில் என்னைப் பலியாக வைத்தேன்
எலியாவின் ஜெபத்துக் கிரங்கியவண்ணம்

வரவேணும் பரனாவியே
இலங்கும் சுடராய் மேவியே

2. எந்தன் பவம் யாவையும் எரிக்கும் வகை தேடியும்
எங்கும் இந்த லோகத்தில் எத்தீயுமே காண்கிலேன்
எந்தன் செயலால் யாதொன்றும் முடியா
தின்றே வானாக்கினி வர வேணும்

வரவேணும் பரனாவியே
இலங்கும் சுடராய் மேவியே

3. குடிகொள் எந்தப் பாவமும் அடியோடே தொலைத்திடும்
தடுத்தாட்கொள்ளும் தோஷமும் சாம்பலாக செய்திடும்
படிமிசை (பூமியின் மேல்) காற்றுக்குப் பறந்தோடும் சாம்பல்போல்
அடியேன் ஏசுவுக்கனுதினம் பணி செய்ய

வரவேணும் பரனாவியே
இலங்கும் சுடராய் மேவியே



Friday, May 1, 2026

கீர்த்தனை 396 - புது வாழ்வு நமக்குப் புதுவாழ்வு

 கீர்த்தனை 396 - புது வாழ்வு நமக்குப் புதுவாழ்வு




புது வாழ்வு நமக்குப் புதுவாழ்வு – இது

பெருவாழ்வு கிறிஸ்து தரும்வாழ்வு

 

1.  பிறந்தவர் இறப்பது பொது மரபு – இங்கு

இறந்தவர் எழுவதோ புதுச்சிறப்பு

இறைவனின் திருமகன் உயிர்த்தெழுந்தார் – கொடும்

மரணத்தின் பிடியினைத் தகர்த்தெறிந்தார்!

 

2.  கல்லறை உலகினில் பல உண்டு – அவை

சொல்லிடும் கதைகளில் கனிவுண்டு

வல்லவர் இயேசுவின் கல்லறையோ – அவர்

இல்லையே என்னிடம் என்றிடுதே!

 

3.  இயேசுவின் உயிர்த்தெழல் பெருநிகழ்ச்சி – அவர்

நேசரின் வாழ்விலும் வரும் நிகழ்ச்சி

நாசமோ மோசமோ நமக்கில்லை – விசு

வாசிகள் மக்கு இறப்பில்லை.


Wednesday, April 15, 2026

கீர்த்தனை 427 - பயணிகள் பாதையில்

 கீர்த்தனை 427 - பயணிகள் பாதையில்


பயணிகள் பாதையில் பலம் தரும் விருந்து
பரமனின் திருவுளம் பார்த்திடும் விருந்து
 
1. படைப்பதின் அழகு படைத்தவர் பரிவு
பணிந்துமே நன்றிப் படைத்திடும் விருந்து
அடிமைகள் உடன் வந்து விடுதலை அருளும்
ஆண்டவர் அருள் நினைவாகிடும் விருந்து
 
2. இறைவனின் அரசதின் முன்சுவை இங்கு
இயேசுவின் அடியவர் இணைவதில் தங்கும்
குறைகளை மறக்கும் குருவருள் பலிக்கும்
குறையிலா முழுமைக்கு வாழ்வது பிறக்கும்
 
3. ஈவதும் ஏற்பதும் விருந்ததில் பொதுமை
இறைவனே தனை இதில் ஈவது புதுமை
ஈவதால் என்றும் மறைவது வெறுமை
சாவிலே வாழ்வது மலர்வதே இனிமை