Tuesday, November 25, 2025

கீர்த்தனை 065 - சாலேமின் ராஜா

 கீர்த்தனை 065 - சாலேமின் ராஜா





சாலேமின் ராஜா சங்கையின் ராஜா
ஸ்வாமி வாருமேன் 
ஸ்வாமி வாருமேன் – இந்தத்
தாரணி மீதினில் ஆளுகை செய்திட
சடுதி வாருமேன்

1. சீக்கிரம் வருவோமென்றுரைத்துப்போன
செல்வக் குமாரனே - இந்த
சீர்மிகும் மாந்தர்கள் தேடித் திரிகின்ற
செய்தி கேளீரோ?

2. எட்டி எட்டி உம்மை அண்ணாந்து பார்த்துக்
கண் பூத்துப் போகுதே - நீர்
சுட்டிக் காட்டிப் போன வாக்குத்தத்தம்
நிறைவேறலாகுதே

3. நங்கை எருசலேம் பட்டினம் உம்மை
நாடித் தேடுதே – இந்த
நானிலத்திலுள்ள ஜீவ பிராணிகள்
தேடிவாடுதே

4. சாட்சியாக சுபவிசேஷம்
தாரணிமேவுதே – உந்தன்
சாட்சிகளுடைய ரத்தங்களெல்லாம்
தாவிக்கூவுதே

********************************************************



Thursday, November 13, 2025

கீர்த்தனை 266 - ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே

 கீர்த்தனை 266 - ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே



ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே எந்தன்
ஆவியும் அவரில் களிக்கின்றதே – இதோ!

நேர்த்தியாய்ப் பாடுவேன் நிதங்கனிந்தே
எந்தன் பார்த்திபனுட பதம் தினம்பணிந்தே – இதோ!

ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே எந்தன்
ஆவியும் அவரில் களிக்கின்றதே.

1. அடிமையின் தாழ்மையைப் பார்த்தாரே – என்னை
அனைவரும் பாக்கிய ளென்பாரே
முடிவில்லா மகிமை செய்தாரே – பல
முடையவர் பரிசுத்தர் என்பாரே – இதோ! 

ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே எந்தன்
ஆவியும் அவரில் களிக்கின்றதே.

2. பயப்படும் பக்தருக் கிரங்குகிறார் – நரர்
பார்த்திட பெருஞ்செயல் புரிகின்றார்
உயர்த்திடு நரர்களை சிதறடிப்பார் – தன்னை
உகந்தவர் தாழ்ந்திடில் உயர்த்துகின்றார் – இதோ! 

ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே எந்தன்
ஆவியும் அவரில் களிக்கின்றதே.

3. முற்பிதாக்களுக்கவர் சொன்னதுபோல் – அந்த
முனியாபி ராமுட ஜனமதன்பால்
நட்புடன் நினை வொடு நல்லிசரேல் – அவன்
நலம்பெற ஆதரித் தார் மறவேல் – இதோ! 

ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே எந்தன்
ஆவியும் அவரில் களிக்கின்றதே.


Tuesday, November 4, 2025

கீர்த்தனை 352 - மனம் இசைந்து அனைவரும்

கீர்த்தனை 352 - மனம் இசைந்து அனைவரும்




மனம் இசைந்து அனைவரும் உடன்பிறப்பாய்
தினம் வாழ்வது சிறப்பானது!
நன்மையானது இன்பமானது
மண்வாழ்வினில் பேரழகு!

மனம் இசைந்து அனைவரும் உடன்பிறப்பாய்
தினம் வாழ்வது சிறப்பானது!

1. அது - ஆரோனின் தலைமீது பொழிந்து
அவனது தாடியில் வழிந்து
அங்கியில் குழைந்து தொங்கலில் இழைந்து
கீழ் வடிந்திடும் பரிமளம் போன்றது!

2. அது - எர்மோனின் மலையதன் மேலும்
சீயோனின் சிகரங்கள் மீதும்
மெல்லெனக் கவிந்து சில்லெனக் குவிந்து
தினம் படர்ந்திடும் பனியினைப் போன்றது!

3. இன்று - இனம்மொழி பொருள்நிலை கொண்டு
எத்தனை பிரிவுகள் உண்டு?
அன்பினில் பகிர்ந்து இன்பமாய் இணைந்து
ஒன்றாய் இணைந்து வாழ்வதே அருளரசு! 
*******************************************************************