Sunday, August 31, 2025
கீர்த்தனை 121 - உந்தன் சுயமதியே
Friday, August 15, 2025
கீர்த்தனை 281 - அதிகாலையில் உம்மைத் தேடுவேன்
கீர்த்தனை 281 - அதிகாலையில் உம்மைத் தேடுவேன்
கீர்த்தனை 122 - வேறு ஜென்மம் வேணும்
கீர்த்தனை 122 - வேறு ஜென்மம் வேணும்
Tuesday, August 5, 2025
கீர்த்தனை 332 - கிறிஸ்தவ இல்லறமே
கீர்த்தனை 332 - கிறிஸ்தவ இல்லறமே
கிறிஸ்தவ இல்லறமே - சிறந்திட
கிருபை செய்வீர் பரனே
கிறிஸ்தவ இல்லறமே
பரிசுத்த மரியன்னை பாலன் யேசு யோசேப்பு
பண்பாய் நடத்திவந்த இன்பக்குடும்பம்போல
1. ஜெபமென்னும் தூபமே தினம் வானம் ஏறவும்
திருவேத வாக்கியம் செவிகளில் கேட்கவும்
சுப ஞானக்கீர்த்தனை துத்தியம் பாடவும்
சுதனேசு தலைமையில் தூய வீடாகவும்
கிறிஸ்தவ இல்லறமே - சிறந்திட
கிருபை செய்வீர் பரனே
கிறிஸ்தவ இல்லறமே
2. ஊழியம் புரியவும் ஊதியம் விரும்பாமல்
உவந்த பெத்தானியா ஊரின் குடும்பம் போல
நாளும் யேசு பிரானை நல் விருந்தாளியாக்கி
நாடியவர் பாதத்தில் கூடியமர்ந்து கேட்டு
கிறிஸ்தவ இல்லறமே - சிறந்திட
கிருபை செய்வீர் பரனே
கிறிஸ்தவ இல்லறமே
3. அன்போடாத்தும தாகம் அரிய பரோபகாரம்
அருமையாக நிறைந்தே அயலார்க் கொளிவிளக்காய்
துன்பம் செய்கிற பலதொத்து வியாதிகளை
தூரந்துரத்தும் வகை சொல்லி சேவையை செய்து
கிறிஸ்தவ இல்லறமே - சிறந்திட
கிருபை செய்வீர் பரனே
கிறிஸ்தவ இல்லறமே
4. மலையதின் மேலுள்ள மாளிகையைப் போலவே
மற்றவர்களுக்கு முன் மாதிரியாய் நின்று
கலை உடை உணவிலும் கல்வி முயற்சியிலும்
கர்த்தருக்கேற்ற பரிசுத்தக் குடும்பமாக
கிறிஸ்தவ இல்லறமே - சிறந்திட
கிருபை செய்வீர் பரனே
கிறிஸ்தவ இல்லறமே
************************








