கீர்த்தனை 246 - வந்தருள் இவ்வாலயத்தில் பாடல் : காபிரியேல் உபதேசியார்
வந்தருள் இவ்வாலயத்தில் மகிமை ஏகோவாவே – உனை வாழ்த்தும் அடியார்க்கு நிதம் வாய்த்த பெரு
வாழ்வே அந்தி பகல் இங்குனை வந்தடையும் அடியார்க்
கிரங்கி ஆதரவாய் ஆண்டு கொள்வாய் ஆதி பராபரன் குமாரா
திருக் கருணை மொழியால் மனத் திருக்கறுக்கும்
பொருட்டெழுந்து தீய வினை மிதித் தழிப்பாய் ஜீவ பெருமானே பெருக்கமுள உன் வசனம் பேதையருக்கே பலிக்க உருக்கமுடன் இரங்கும் ஐயா உன் பதமே தஞ்சம்
என்றும்
சஞ்சலம் மிஞ்சும் மனதால் சரணம் உனக்கென்று
வரும் தமியர் தமக் காறுதலாய்த் தயைசெய் ஆதிசேயா செஞ் சொல் மலிந்த புலவர் செப்பு தமிழ்க்
குகந்த உந்தன் சீரடிக்கண் சேர்பவர்க்கே ஆருயிர் உண்டாவதற்கே
பூவுலகை ஆளும் மன்னர் போதம் உணர் வேதியர் உன் பொற் பதத்தை அர்ச்சிக்கவேநற் பதம் தா தேவே மூவுலகிலும் துதியும் முக்யம் மகத்துவம்
கனமும் மா பலமுமே உமக்கே மங்களம் உண்டாவதாக
”கிறிஸ்தவப் பாமாலைகளுடன் கீர்த்தனைகளையும் பதிவேற்றுங்கள்” என்று பலரிடமிருந்து தொடர்ச்சியாக வந்த அன்பு வேண்டுகோளைத் தொடர்ந்து கீர்த்தனைகளைப் பற்றியும் பதிவிடலாம் என்று எண்ணினேன்.
எங்கள் ஆலயத்தில் நாங்கள் பாடும் கீர்த்தனைகளை சிலவற்றைப் பதிவு செய்து YouTube பக்கத்தில் தரவேற்றம் செய்துள்ளேன்.
துவக்கத்தில், ஆலயத்தில் ஆராதனையின்போது பாடப்படும் பாடல்களை என் அலைபேசியில் பதிவு செய்து வந்தேன். அப்பாடல்களின் ஒலித்தரம் ஒழுங்கற்று இருந்த காரணத்தால் இப்போது Audio Mixer'ல் இருந்து பதிவு செய்து அப்பாடல்களைத் தரவேற்றுகிறேன். இப்படிப் பதிவு செய்யப்பட்ட கீர்த்தனைகளைக் கேட்க விரும்புவோர் இந்தத் ⇉ தளத்தில் அவற்றைக் கேட்கலாம். இதுவரை 94 கிறிஸ்தவக் கீர்த்தனைகளைப் தரவேற்றம் செய்ய ஆண்டவர் கிருபை செய்தார். Audio Mixer'ல் இருந்து நல்ல ஒலித்தரத்தில் பதிவு செய்யப்பட்டு, பதிவேற்றம் செய்யப்பட்ட கீர்த்தனைகளின் முன்னால் "HQ" என்று Prefix செய்துள்ளேன்.
ஆண்டவரின்அடியார்கள்ஜெபித்து, உபவாசித்து, தங்கள்வாழ்வனுபவங்களில்இருந்துஇயற்றியபொருள்நிறைந்தபாமாலைகள் மற்றும்கிறிஸ்தவக்கீர்த்தனைகளின்சிறப்புகளை அறிய ஆவல் கொண்டிருக்கும் நம் சகோதரருடன்சமூகவலைத்தளங்களில்தொடர்ந்துபகிருங்கள். பொருளற்றவார்த்தைகள், இரைச்சலானஇசையுடன்கூடியபாடல்களின்பால்ஈர்க்கப்பட்டுள்ள, நம்ஆலயங்களின்இளம்தலைமுறையினர்க்கும், அடுத்தசந்ததியர்க்கும்இந்தபொக்கிஷங்களைக்கொண்டுசேர்ப்பதுநம்கடமை. இந்தவலைத்தளத்தைத்தங்கள்நண்பர்கள்பட்டியலில்இருப்போருடன்பகிர்ந்து, தங்கள்ஆதரவைத்தொடர்ந்துநல்குங்கள் !
இப்பக்கத்தைமேலும்மெருகூட்ட, பொருள்நிறைந்ததாக்க, இன்னும் அநேகர்க்குப் பயனுள்ளதாக்கத்,தங்களின்மேலானகருத்துகள் / ஆலோசனைகளைஎதிர்நோக்குகிறேன்.
’திருச்சபை’ / ‘தேவார்ச்சனை’ எனும் தலைப்புகளின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள இக்கீர்த்தனையை எழுதியவர் திரு. ஜி.சே.வேதநாயகம் என்று நம் கீர்த்தனை புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனந்தபைரவி ராகத்தில், ஆதிதாளத்தில் அமைக்கப்பட்டுள்ள இப்பாடல் நம் ஆலயங்களில் மிக அரிதாகவே பாடப்படுகிறது.
இப்பதிவில் நாங்கள் பாடியிருக்கும் ராகம்தான் இதன் மூல ராகமா அல்லது பின்னர் உருவாக்கப்பட்ட வேறேதும் ராகமா என்பது குறித்தத் தகவல் இல்லை. இங்கே இப்பாடல் பாடப்பட்டுள்ள ராகத்தை எங்கள் ஆலயத்தின் பாடகர் குழு தலைவர், ஒரு இசைப்பேழையில் கேட்டு எங்களுக்குக் கற்றுக்கொடுத்தார். இப்பாடலுக்கான இசையை நாங்கள் பாடியவண்ணமே எழுதி கீழே கொடுத்துள்ளேன்.
’திருச்சபை’ ‘ஆலயம்’ ஆகிய தலைப்புகளை உள்ளடக்கிய ஞாயிறு ஆராதனைகளில் தியானிக்கவும், ஆலயப் பிரதிஷ்டை போன்ற சமயங்களில் பாடவும், இக்கீர்த்தனை உகந்தது.
ஆலயம் போய்த்தொழ வாருமென்ற தொனி
ஆனந்தப் பரவசம் அருளுதாத்துமந்தனில்
ஆலயந்தொழுவது சாலவும் நன்றென
ஆன்றோருரை நெறி சான்ற வாக்கானதே
ஆவலாயதி காலையும் பகல் மாலையுந் திருநாளிலும் பரன் – ஆலயம்