Wednesday, May 15, 2024

கீர்த்தனை 090 - கும்பிடுகிறேன் நான்

 கீர்த்தனை 090 - கும்பிடுகிறேன் நான்






கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் எங்கள்
குருவேசுநாதர் பதங் கும்பிடுகிறேன்

1. அம்புவி படைத்தவனைக் கும்பிடுகிறேன் - எனை
ஆண்டவனை, மீண்டவனைக் கும்பிடுகிறேன்
நம்புமடி யார்க்கருளைக் கும்பிடுகிறேன் - பவ
நாசனைக் க்ருபாசனைக் கும்பிடுகிறேன்

கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் எங்கள்
குருவேசுநாதர் பதங் கும்பிடுகிறேன்

தம்பமெனக் கானவனைக் கும்பிடுகிறேன் - நித்திய
சருவ தயாபரனைக் கும்பிடுகிறேன்
உம்பர் தொழும் வஸ்துவையே கும்பிடுகிறேன் - தொனித்
தோசன்னா வோசன்னாவென்று கும்பிடுகிறேன்

கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் எங்கள்
குருவேசுநாதர் பதங் கும்பிடுகிறேன்

2. ஒரு சருவேசுரனைக் கும்பிடுகிறேன் - ஒன்றும்
ஒப்பதில்லா மெய்ப்பொருளைக் கும்பிடுகிறேன்
திருவுருவானவனைக் கும்பிடுகிறேன் - தவிது
சிம்மாசனாதிபனைக் கும்பிடுகிறேன்

கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் எங்கள்
குருவேசுநாதர் பதங் கும்பிடுகிறேன்

குருவென வந்தவனைக் கும்பிடுகிறேன் - யூதர்
குருகுல வேந்தனைக் கும்பிடுகிறேன்
அருமை ரட்சகனைக் கும்பிடுகிறேன் - என
தாத்துமாவின் நேசர்தனைக் கும்பிடுகிறேன்

கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் எங்கள்
குருவேசுநாதர் பதங் கும்பிடுகிறேன்





No comments:

Post a Comment