Friday, September 19, 2025

கீர்த்தனை 264 - தேவனே யேசு நாதனே

 கீர்த்தனை 264 - தேவனே யேசு நாதனே



தேவனே யேசுநாதனே இத்
தேவ ஆலயம் வந்திடும்
தேவ ஆலயம் வந்தவர்க்கருள்
திவ்ய ஆவியை ஈந்திடும்

1. பாவிகள் உமக்காலயம் செய்யப்
பாத்திரர்களோ அல்லவே
பாவநாசராம் யேசுவே உம்மால்
பாத்ரராய் இதைச் செய்தனர்

2. கூடிவந் தும்மையே பணிந்திடக்
குறித்த இச்சிறு ஆலயம்
நாடி வந்தவர் யாவருக்குமுன்
நல்வசன முளதாகவும்

3. தேவனே உமக்கான ஆலயம்
பாவியின் சிறு நெஞ்சமே
பாவம் யாவையும் நீக்கியே சிறு
தேவ ஆலய மாக்கிடும்
*******************


Saturday, September 13, 2025

கீர்த்தனை 218 - பாக்கியர் இன்னார் என்றிறைவன்

கீர்த்தனை 218 - பாக்கியர் இன்னார் என்றிறைவன்




பாக்கியர் இன்னார் என்றிறைவன்
பண்புடன் சொன்னார்

ஆக்கியோன் யேசுவின் வாக்கியம் கேட்கவே
அனந்தமான ஜனம் வனந்தனில் நிற்கையில்

பாக்கியர் இன்னார் என்றிறைவன்
பண்புடன் சொன்னார்

1. ஆவி பணிந்தோர், மனத்தாழ்மையானதணிந்தோர்
பாவிகள் தாமென்று பயந்து நடப்போர்
தேவனின் ராஜியம் சேர்வதால் பாக்யர்

 

2. துக்கப்படுவோர், பவத்துக்காய்த் துயரப்படுவோர்
விக்கினமின்றி என் தேவன் அருளினால்
மிக்க மெய்யாறுதல் மீட்புறும் பாக்யர்

 

3. சாந்த குணத்தோர், சண்டைகோபதாபம் வெறுத்தோர்,
வேந்தனார் செய்கையுள் சாந்தனையும் கொள்வோர்
மேதினி வாழ்விலும் விண்ணிலும் பாக்யர்

 

4. நீதியின் பேரில் பசி தாகம் நித்தம் கொள்வோரில்
போத மெய் புத்தியும் பூரண பக்தியும்
காதலன் ஆவி கடாட்சிப்பர் பாக்யர்

 

5. இரக்கமுடையோர், பிறர் மீதுருக்கமுடையோர்
நெருக்கப்படுவோர்க்கு நேயமுற்றுதவுவோர்
பெருக்க இரக்கம் பெற்றிடும் பாக்யர்

 

6. சுத்தநெஞ்சத்தார், தேவனருன் சுகிர்த ஜென்மத்தார்
பத்தியில் வர்த்தித்து நித்தமும் தேவனின்
பரிசுத்த சமுகத்தைத் தரிசிக்கும் பாக்யர்

 

7. சமாதானத்தை நடப்பித்து சல்யம் வாதத்தை
தமதுரை நடக்கையால் தள்ளி ஒழுகுவோர்
நமதேகன் சேயர்கள் என்னும் மெய் பாக்யர்

 

8. பகைஞரால் நஷ்டங்கள் பட்டு
துர்செய்கை நீங்கியே துன்பப்படுவோர்
சுகலோகம் சேர்ந்தென்றும் முகியாத பாக்யர்

Wednesday, September 10, 2025

கீர்த்தனை 300 - தோத்திரப் பண்டிகை ஆசரிப்போமே

 கீர்த்தனை 300 - தோத்திரப் பண்டிகை ஆசரிப்போமே




தோத்திரப் பண்டிகை ஆசரிப்போமே
தூயகம் ஊறிய பக்தியால் நாமே

1.  பாத்திரம் இதுவெனப் பகர்உடல் பொருளாவி
பரமனுக் கர்ப்பணம்செய் பரிவு நிறைய மேவி

தோத்திரப் பண்டிகை ஆசரிப்போமே

2.  பனித்துளி நிலத்தினைப் பண்படுத்தினதன்றே
பகருமுகில் கொழுமைப் படுத்திய தெண்ணி நன்றே

தோத்திரப் பண்டிகை ஆசரிப்போமே

3.  கடவுளே பயிருக்குக் கனமழை பெய்வித்தாரே
காங்கையால் கதிர்வளம் கதிக்கவும் உய்வித்தாரே

தோத்திரப் பண்டிகை ஆசரிப்போமே

4.  நெஞ்சத்தில் தெய்வஅன்பாம் நிதிநிகர் விதைபெய்து
நித்திய சமாதானம் நிறுவ விண்ணப்பம்செய்து

தோத்திரப் பண்டிகை ஆசரிப்போமே

5. இறைவன் இரத்தக் கையால் இரட்சண்யம் அருள்வித்தை
இதயத்தில் விதைத்ததற் கின்குண பலன்வைத்து

தோத்திரப் பண்டிகை ஆசரிப்போமே
தூயகம் ஊறிய பக்தியால் நாமே
***********************************************