Friday, May 3, 2024

கீர்த்தனை 236 - திருமாமறையே அருள்பதியே

 கீர்த்தனை 236 - திருமாமறையே அருள்பதியே





திருமா மறையே அருள்பதியே நின்
திருச்சபை வளர நின்தயை புரியே

1. கருணை வாசகக் கதிர்பலத் தொளிர
கனகார் புவி நின்றே அகல
மருள் ஜன மொளியுற அவனரு ளுணர

2.யேசுநாமமெங் கணுமொளி வீச
இறையே நினை மெய் விசுவாச
நேச மோடேயுனின் தாசர்கள் பேச

3. ஞாலம் அந்தமட் டெம்முடனிருக்க
நயவாக் களித்தாய் எமக்குருக்க
சீலமதாயுனின் வசனமதுரைக்க

4. ஆறிரண்டு பேரான வருடனே
அமலா இருந்தாய் வெகுதிடனே
போரற அருளிய நேயமே போலே

5. நின்னையன்றிக் கட்டிட எமக்காகா
நேயா தூயா நினை வாகா
உன்னி உழைத்திடப் பலமளி யேகா

6. சத்ய போதம் இத்தரைதனில் செழிக்க
தமியோர் நின் புகழே உரைக்க
நித்திய பாக்கியமே புவிக் களிக்க


No comments:

Post a Comment