Wednesday, April 15, 2026

கீர்த்தனை 427 - பயணிகள் பாதையில்

 கீர்த்தனை 427 - பயணிகள் பாதையில்


பயணிகள் பாதையில் பலம் தரும் விருந்து
பரமனின் திருவுளம் பார்த்திடும் விருந்து
 
1. படைப்பதின் அழகு படைத்தவர் பரிவு
பணிந்துமே நன்றிப் படைத்திடும் விருந்து
அடிமைகள் உடன் வந்து விடுதலை அருளும்
ஆண்டவர் அருள் நினைவாகிடும் விருந்து
 
2. இறைவனின் அரசதின் முன்சுவை இங்கு
இயேசுவின் அடியவர் இணைவதில் தங்கும்
குறைகளை மறக்கும் குருவருள் பலிக்கும்
குறையிலா முழுமைக்கு வாழ்வது பிறக்கும்
 
3. ஈவதும் ஏற்பதும் விருந்ததில் பொதுமை
இறைவனே தனை இதில் ஈவது புதுமை
ஈவதால் என்றும் மறைவது வெறுமை
சாவிலே வாழ்வது மலர்வதே இனிமை




Monday, April 6, 2026

கீர்த்தனை 241 - சரணம் சரணம் சரணம் எனக்குன்

 கீர்த்தனை 241 - சரணம் சரணம் சரணம் எனக்குன்




சரணம் சரணம் சரணம் எனக்குன்
தயை புரியும் என் பரனே

மரணத்தின் பெலன் அழித்துயிர்த்த என் 
மன்னா ஓசன்னா!

சரணம் சரணம் சரணம் எனக்குன்
தயை புரியும் என் பரனே

1. தரணிதனில் வந்தவதரித்த 
தற்பரனே எனக்காக - வலு 
மரணம் அடைந்தும் உயிர்த்தெழுந்ததென்
மகிமை நித்திய பெருமை

2. சுரர்கள் போற்றும் பரனே உனக்குத்
துரோகியான எனக்கு - நீயே
இரவு பகல் என் குறைவு நீக்க 
உண்டேது நலம் என்மீது 

3. தப்பின ஆடதற்கொத்த அடியேனைத்
தானே வந்து தேட - உனக்
கெப்படிச் சித்தம் உண்டானதிவ் வற்பனுக்
கற்புதமாம் முடி சூட!

4. எவ்வித நன்மைக்கும் காரணனே உனை
ஏழை அடியேனே - பற்றி
இவ்வுலகத்தில் எவ்வேளையும் போற்றவே
இரங்காய் எனக்கிரங்காய்! 
****************************************************