Friday, July 25, 2025

கீர்த்தனை 157 - என்னையும் உமதாட்டின்

கீர்த்தனை 157 - என்னையும் உமதாட்டின்




என்னையும் உம தாட்டின் மந்தையோ
டேற்றுக் காத்திடும் யேசுவே
ஏற்றுக் காத்திடும் ஏசுவே எனை
ஏற்றுக் காத்திடும் ஏசுவே

1.  வாசலாகவே இருக்கிறேன் எனால்
வந்தவன் மனம் நொந்திடான் - வெகு
நேசமாகவே வாழ்வான் என்ற நல்
நிமலனே எனை சேர்த்திடும்

2.  ஜயிருபது ஆட்டினில் ஒன்று
அகன்றிட மனம் உகந்து கோன் - அதை
மெய்யதாகவே தேடுவான் என்ற
மேய்ப்பரே எனைச் சேர்த்திடும்

3.  நல்ல மேய்ப்பன் நான் என மொழிந்த என்
நாதனே ஞான போதனே - ஜீவ
புல்லுள்ள ஸ்தலந் தன்னில் கொண்டெனைப்
போஷித்து முசிப்பாற்றிடும்

4.  மேய்ப்பராகவே இருக்கிறீர் எந்தன்
மேய்ச்சலும் நீர் தாமலோ - ஞான
வாய்ப்புள்ள சத்ய மறையில் மேய்ந்து நான்
வளர்ந்திட அருள் புரிந்திடும் 

5.  அன்புடைய மெய் மேய்ப்பராயிருந்
தாட்டுக்காய் சொந்த ஜீவனை - வெகு
இன்பமாகவே ஈந்து மீட்ட நல்
ஏசுவே எனை சேர்த்திடும்


Tuesday, July 15, 2025

கீர்த்தனை 202 - நல்லாயன் யேசு சாமி

 கீர்த்தனை 202 - நல்லாயன் யேசு சாமி



நல்லாயன் யேசு சாமி ராஜா தாவீதுடை மகவு
ஒரே மகவு ஆட்டுக்காய் உயிர் தாறார் 
நல்லாயன் யேசு சாமி ராஜா தாவீதுடை மகவு

1.  எல்லார்க்கும் பெரியான் எம்பிரான் தம்பிரான்
ஏகவஸ்தோரே ஏகோவா - மா
தேவ கிறிஸ்து நீ கா வா வா

நல்லாயன் யேசு சாமி ராஜா தாவீதுடை மகவு

2.  மன்னர் மன்னர் கொண்டாடிய நீடிய
வானப் பரமகு மாராவோ - அதி
ஞானத் திறம் மிகும் வீராவோ

நல்லாயன் யேசு சாமி ராஜா தாவீதுடை மகவு

3.  விண்ணாடர் முழங்க மண்ணாடர் விளங்க
மேவி வந்தமே சையாவே - படு
பாவி சொந்தம் ஏசையாவே 

நல்லாயன் யேசு சாமி ராஜா தாவீதுடை மகவு

4.  சீராட்டுக் காட்டி எந்தையார் தந்தையார்
திருக்கடைக் கண்ணால் பார்த்தாரே - வந்து
திரும்பத் திரும்ப எனை சேர்த்தாரே

நல்லாயன் யேசு சாமி ராஜா தாவீதுடை மகவு

5.  ஆட்டைக் கூட்டி ஓர் தொழுவத்தில் அடைப்பார்
அரிய நல்ல மேய்ச்சல் கொடுப்பார்
அன்பாகத் தோளினிலே எடுப்பார் 

நல்லாயன் யேசு சாமி ராஜா தாவீதுடை மகவு

*******************





Sunday, July 6, 2025

கீர்த்தனை 231 - காணிக்கை தருவாயே

கீர்த்தனை 231 - காணிக்கை தருவாயே




காணிக்கை தருவாயே கர்த்தர்க்குனது 
காணிக்கை தருவாயே 

காணிக்கை தா உனக்காய் 
ஆணிக் குருசிலேசு 
வேணும் ரட்சிப்பினை நீ 
காணும்படி செய்ததால் 

காணிக்கை தருவாயே 

1. பத்தில் ஒரு பங்குதானோ 
பத்தினில் கட்டுப் பட்ட யூதருக் கல்லவோ 
அத்தன் உனக்களித்த அளவை உட்கார்ந்து பார்த்தால் 
பத்தில் ஒரு பங்கல்ல பல மடங்காகிடாதோ 

காணிக்கை தருவாயே 

2. உந்தன் உடல் உன் சொந்தமோ 
அதைவிடினும் உன்மனம் ஆவி பந்தமோ 
அன்னவனுடைய தென்றறிந்து உணர்வாயானால் 
உன்னையும் உன்னுடைய உடைமையுமல்லோ ஈவாய்
 
காணிக்கை தருவாயே 

3. தேவ வசனம் பரப்ப 
அதனுக்கென்று செல்லும் செலவை நிரப்ப 
ஆவலாய் யேசுவுக்கே ஆராதனை நடத்தும் 
தேவ ஊழியத்துக்கும் திறந்த மனதுடனே 

காணிக்கை தருவாயே 

4. பயிர் பலன் மூலமாகவும் 
இன்னும் பலர்க்குப் பணம் முதலானதாகவும் 
உயிர்ப் பிராணியாகவும் உதவும் கடவுளுக்கே 
உயிரைப் படைப்பாயோ உடைமையைக் கொடாவிடில் 

காணிக்கை தருவாயே கர்த்தர்க்குனது 
காணிக்கை தருவாயே