கீர்த்தனை 080 - அனந்த ஞான சொரூபா
அனந்த ஞான சொரூபா, நமோ நம!
அனந்த ஞான சொரூபா!
1. கனங்கொள் மகிமையின் கர்த்தாவே,
காத்திர நேத்திர பர்த்தாவே - நரர்
காண வந்தாரே - பரன் நரர் காண வந்தாரே
கருணாகர தேவா, அனந்த ஞான சொரூபா!
அனந்த ஞான சொரூபா, நமோ நம!
அனந்த ஞான சொரூபா!
2. அந்தப் பரமானந்த குணாளா
ஆதத்தின் தீ தற்ற மனுவேலா - எமை
ஆண்டு கொண்டாரே, பரன் எமை ஆண்டு கொண்டாரே,
ஞானாதிக்கத் துரையே, அனந்த ஞான சொரூபா!
அனந்த ஞான சொரூபா, நமோ நம!
அனந்த ஞான சொரூபா!
3. ஆடுகளுக் குரிமைக் கோனே,
ஆரண காரணப் பெருமானே - நரர்க்
கன்பு கூர்ந்தாரே
- பரன் நரர்க் கன்பு கூர்ந்தாரே,
கிருபாசனத் தானே, அனந்த ஞான சொரூபா!
அனந்த ஞான சொரூபா, நமோ நம!
அனந்த ஞான சொரூபா!
4. பந்தம் துயரம் தீர்த்தாரே,
பாவத்தை சாபத்தை ஏற்றாரே - எமைப்
பார்க்க வந்தாரே - பரன் எமைப் பார்க்க வந்தாரே,
பரமாதிக்கத் தோரே, அனந்த ஞான சொரூபா!
அனந்த ஞான சொரூபா, நமோ நம!
அனந்த ஞான சொரூபா!
No comments:
Post a Comment