Tuesday, January 27, 2026

கீர்த்தனை 287 - ஓய்வு நாள் இது

கீர்த்தனை 287 - ஓய்வு நாள் இது


ஓய்வுநாள் இது மனமே தேவனின்
உரையைத் தியானம் செய் கவனமே

நேய தந்தையர் சேயர்க் குதவிய
நெறி இச்சுவிசேஷ வசனமே

 

1.       ஜீவ சுகபுத்ர செல்வம் தந்தவர்
சேவடி உனக் கபயமே
மேவி அவர் கிருபாசனத்தின் முன்
வேண்டிக் கொள் இது சமயமே

 

2.       ஆறு நாளுனக்களித்தவர்

இளைப்பாறி ஏழினில் களித்தவர்
கூறும் பூரண ஆசீர்வாதத்தை
குறித்துனை இதற்கழைக்கிறார்

 

3.       கர்த்தர் ஆசனம் குறுகிக் கேள் இன்று
காலை நண்பகல் மாலையும்
சுத்தம் நாடுவோர் யாவரும் வந்து
துதி செய்யும் இத் தேவாலயம்

 

*****************************************************************



Sunday, January 18, 2026

கீர்த்தனை 252 - ஐயனே இவர்க்காசி

 கீர்த்தனை 252 - ஐயனே இவர்க்காசி



ஐயனே! இவர்க்காசி ஈகுவாய்
மெய்யாய் உனை சார – என்றும்
பொய்யாமிவ் வுலகாசையை விட்டு
மெய்யாய் உனை சார – என்றும்

1. பாவமும் ஜெகஜாலமும் விட்டுப்
பனுவலுரைப்படியே (வேத உரை) - வெகு
ஆவலாயுனது அருளினாலுயிர்
அடையக் கதியடைய – என்றும்

ஐயனே! இவர்க்காசி ஈகுவாய்
மெய்யாய் உனை சார – என்றும்

2. நற்றுதி செய்யும் பக்தராய் உந்தன்
பொற்றாளிணை போற்றி! – ஓங்கு
சற்குணமும் மெய்வாழ்வுமே பெற்று
சான்றோர் நெறி சார – என்றும்

ஐயனே! இவர்க்காசி ஈகுவாய்
மெய்யாய் உனை சார – என்றும்

3. இன்று தொட்டு இவர் என்றுமே உனை
சென்றே எங்கும் கூறி – பயன்
நன்றி பெற்று உயர் வென்றியுற்று இனி
ஒன்றி உயர்ந்தோங்க – என்றும்

ஐயனே! இவர்க்காசி ஈகுவாய்
மெய்யாய் உனை சார – என்றும்

4. அன்று சீடராய்ப் பன்னிருவரை
அழைத்தாய் தயை விளைத்தாய் - இவர்
என்றும் சபையில் ஒன்றிவைகிட (இணைந்திருக்க)
நின்றுன் கிருபை ஈவாய் – என்றும்

ஐயனே! இவர்க்காசி ஈகுவாய்
மெய்யாய் உனை சார – என்றும்
பொய்யாமிவ் வுலகாசையை விட்டு
மெய்யாய் உனை சார – என்றும்

****************************



Thursday, January 15, 2026

கீர்த்தனை 441 - பாவம் என்னைத் தொடர்ந்தாலும்

 கீர்த்தனை 441 - பாவம் என்னைத் தொடர்ந்தாலும்

பாவம் என்னைத் தொடர்ந்தாலும்

இயேசு தேவா உம்மை மறவேனே

 

1. செய் பாவம் நினைத்து நான் அழுகின்றேன் அதை
செய்யாமல் இருந்திட பலமுமில்லை
மெய்யாக உம் துணை வேண்டுமய்யா எந்தன்
அய்யா நின் பிள்ளை நானல்லவா

 

பாவம் என்னைத் தொடர்ந்தாலும்

இயேசு தேவா உம்மை மறவேனே

 

2. உள்ளத்தில் நல்லலெண்ணம் பல உண்டு ஆனால்
வெள்ளத்தில் அடிபட்டுச் செல்லுகின்றேன்
உள்ளதை உம்மிடம் சொல்லிவிட்டேன் எந்தன்
உடலையே உமக்கெனத் தந்துவிட்டேன்

 

பாவம் என்னைத் தொடர்ந்தாலும்

இயேசு தேவா உம்மை மறவேனே

 

3. மன்னவா உம்மிடம் ஓடி வந்தேன் பாவ
மன்னிப்பு உண்டென நம்பி வந்தேன்
மன்னிப்பு வழங்கினால் போதாது என்னை
மாற்றாமல் போய்விடில் வாழ்வேது

 

பாவம் என்னைத் தொடர்ந்தாலும்

இயேசு தேவா உம்மை மறவேனே

 

கீர்த்தனை 084 - யேசு நசரையினதிபதியே

 கீர்த்தனை 084 - யேசு நசரையினதிபதியே

யேசு நசரையினதிபதியே 
பவநரர் பிணையென வரும்
யேசு நசரையினதிபதியே 
.
தேசுறு பரதல வாசப் பிரகாசனே
ஜீவனே அமரர் பாவனே மகத்துவ

யேசு நசரையினதிபதியே 

1. இந்த உலகு சுவை தந்து போராடுதே
எனதுடலும் அதுவோடிசைந்து சீராடுதே
தந்த்ர அலகை சூழ நின்று வாதாடுதே
சாமி பாவியகம் நோயினில் வாடுதே 

யேசு நசரையினதிபதியே 
பவநரர் பிணையென வரும்
யேசு நசரையினதிபதியே 

2. நின் சுய பெலனல்லால் என் பெலன் ஏது
நினைவு செயல் வசனம் முழுதும் பொல்லாது
தஞ்சம் உனை அடைந்தேன் தவற விடாது
தாங்கி ஆள் கருணை ஓங்கி எப்போதும்

யேசு நசரையினதிபதியே 
பவநரர் பிணையென வரும்
யேசு நசரையினதிபதியே 

3. கிருபையுடன் என் இருதயந்தனில் வாரும்
கேடுபாடுகள் யாவையும் தீரும்
பொறுமை நம்பிக்கை அன்பு போதவே தாரும்
பொன்னுலகமதில் என்னையும் சேரும்

யேசு நசரையினதிபதியே 
பவநரர் பிணையென வரும்
யேசு நசரையினதிபதியே 
************************************



Monday, January 12, 2026

கீர்த்தனை 192 - அருமையுற நீ இறங்கி

 கீர்த்தனை 192 - அருமையுற நீ இறங்கி 


1. அருமையுற நீ இறங்கி அடியனுள மீது தங்க
அணுவளவிலாது பங்கம் அகன்றோடும்
அருளொளி அன்பேயுறைந்து அதிகவுயர்வாய் வளர்ந்து
அகமுழுதுமே நிறைந்து  வழிந்தோடும்

அருமையுற நீ இறங்கி அடியனுள மீது தங்க
அணுவளவிலாது பங்கம் அகன்றோடும்

2.  திருவரசுன் சீர்குணங்கள் இனிய திருவாசகங்கள்
திவிய வரமாக வந்து எனதாகும்
தினமுமெழிலாயிலங்கி எனதகமுமே கனிந்து
சிறுமை செயும் 'நான்' மறைந்து பறந்தோடி

அருமையுற நீ இறங்கி அடியனுள மீது தங்க
அணுவளவிலாது பங்கம் அகன்றோடும்

3. மருவு கிறிஸ்தேசுன் அன்பும் அமருமழகான இன்பும்
மலர்முக சந்தோஷ பண்பும் சுடரான
மகிமையும் நின்னோடு வந்து எனதிதயமே நிரந்து
வளமை வரவே விளைந்து நிலையாக

அருமையுற நீ இறங்கி அடியனுள மீது தங்க
அணுவளவிலாது பங்கம் அகன்றோடும்

4. உரிமையுடனே உவந்து மனமதியெல்லாம் கவர்ந்து
உனதடிமையாய்ப் பரிந்து எனையாளாய்
உனத சுனையாய் சுரந்து அடியருளமே விரிந்து
உதவு நதியாக வந்த பெருமானே

அருமையுற நீ இறங்கி அடியனுள மீது தங்க
அணுவளவிலாது பங்கம் அகன்றோடும்
**********************************************