Sunday, May 19, 2024

கீர்த்தனை 005 - சருவலோகாதிபா நமஸ்காரம்

 கீர்த்தனை 005 - சருவலோகாதிபா நமஸ்காரம்



1. சருவ லோகாதிபா நமஸ்காரம்
சருவ சிருஷ்டிகனே நமஸ்காரம்
தரை கடல் உயிர் வான் சகலமும் படைத்த
தயாபர பிதாவே நமஸ்காரம்
 
2. திரு அவதாரா நமஸ்காரம்
ஜெகத்திரட்சகனே நமஸ்காரம்
தரணியில் மனுடர் உயிர் அடைந்தோங்க
தருவினில் மாண்டோய் நமஸ்காரம்
 
3. பரிசுத்த ஆவி நமஸ்காரம்
பரம சற்குருவே நமஸ்காரம்
அரூபியாய் அடியார் அகத்தினில் வசிக்கும்
அரியசித்தே சதா நமஸ்காரம்
 
4. முத்தொழிலோனே நமஸ்காரம்
மூன்றில் ஒன்றோனே நமஸ்காரம்
கர்த்தாதி கர்த்தா கருணை சொரூபா
நித்ய த்ரியேகா நமஸ்காரம்
********************************************
 




1 comment:

  1. I would like stanza as well in the song sheet which u provide. Love the Effort. May God Bless You

    ReplyDelete