Wednesday, May 22, 2024

கீர்த்தனை 009 - தேவ தேவனே எகோவா

 கீர்த்தனை 009 - தேவ தேவனே எகோவா





தேவ தேவனே எகோவா,
வா, என் ஜீவனே
 
காவலர்க் குபதேசனே
கனபாவிகட் கதிநேசனேஉயர்
கர்த்தன் ஏக திரித்துவ ஞான
மகத்துவ ராஜகிறிஸ்துவாகிய
 
தேவ தேவனே எகோவா,
வா, என் ஜீவனே
 
1. அந்த மேனியேகனம் பெரும்அனந்த ஞானியே
விந்தை மானியேசுதந்தரம்மிகுந்த தானியே
தந்தையர் தர, வந்தவா, - பசு
மந்தை யூடு பிறந்தவா,
தந்தையர் தர, வந்தவா, - பசு
மந்தை யூடு பிறந்தவா, - கதி
தந்தவா, சொல் உவந்தவா - மெய்
சிறந்தவா, விண்ணெழுந்தவா, திவ்ய
 
தேவ தேவனே எகோவா,
வா, என் ஜீவனே
 
2. சத்திய வாசனே, - அருள்மிகும் - தவிது மைந்தனே
நித்திய நேசனே, - அடியவர்நினையும் ஈசனே,
பத்தருக்குப காரனே, - வளர்
பெத்தலைக் கதிகாரனே
பக்தருக்குப காரனே, - வளர்
பெத்தலைக் கதிகாரனே, - கன
பாரனே, அதிதீரனே, நல்
உதாரனே, பெல வீரனே, ஜெய
 
தேவ தேவனே எகோவா,
வா, என் ஜீவனே
 
3. வான சீலனே, - மனு உரு - வான கோலனே
ஞான பாலனே, அதிசய - நன்மை நூலனே,
பானுவே மனுவேலனே, - இம்
மானுவேல் அனுகூலனே,
பானுவே மனுவேலனே, - இம்
மானுவேல் அனுகூலனே, - கன
பத்தியே தரு துத்தியமே, - நெடு
நித்தியமாய் வளர் வஸ்துவே ஒரு
 
தேவ தேவனே எகோவா,
வா, என் ஜீவனே



No comments:

Post a Comment