Monday, August 4, 2025

கீர்த்தனை 429 - இல்லத்தின் தலைவராய் இயேசு

 கீர்த்தனை 429 - இல்லத்தின் தலைவராய் இயேசு

இல்லத்தின் தலைவராய் இயேசு இருந்தால்
இல்லை என்பது இல்லையே

1.         நிறைவான வாழ்வினைத் தருவார் - தந்து
குறை யாவும் போக்கியே விடுவார்
மறைவான விருந்தினராவார் - இன்ப
மறை ஞான விருந்தினைத் தருவார்

2.         வழியாக வருபவர் அவரே - வழியில்
ஒளியாகத் திகழ்பவர் அவரே
வழுவாமல் காப்பவர் அவரே நம்மைத்
தழுவியே அணைப்பவர் அவரே

3.         அவர் பாதம் தொடர்ந்திட வேண்டும் - நித்தம்
அவர் பாதை நடந்திட வேண்டும்
அவர்போல் வாழ்ந்திட வேண்டும் - என்றும்
பிறர்க்காக உழைத்திட வேண்டும்
**********************************************




No comments:

Post a Comment