கீர்த்தனை 122 - வேறு ஜென்மம் வேணும்
வேறு ஜென்மம் வேணும் – மனம்
மாறுதலாகிய உள்ளத் தூய்மை என்னும்.
1. கூறு பரிசுத்தர் மாறிலா தேவனின்
தேறுதலான விண்பேறு பெற இங்கே
வேறு ஜென்மம் வேணும்
2. பாவசுபாவமும் ஜீவியமும் மாறத்
தேவனின் சாயலை மேவுவதாகிய
வேறு ஜென்மம் வேணும்
3. மானிடரின் அபிமானத்தினாலல்ல,
வானவரின் அருள் தானமாக வரும்
வேறு ஜென்மம் வேணும்
4. ஒன்றான ரட்சகர் வென்றியதை நம்பி,
மன்றாடுவோருக்கு ஒன்றுவதாகிய
வேறு ஜென்மம் வேணும்
5. மைந்தர் கெடாமல் உகந்து ஈடேறவே,
சொந்த மகன்தனைத் தந்த பிதா அருள்
வேறு ஜென்மம் வேணும்
6. மண்ணினில் பத்தராய் நண்ணி நடக்கவும்,
விண்ணினில் தூயராய் தண்ணளி கொள்ளவும்
மாறுதலாகிய உள்ளத் தூய்மை என்னும்.

No comments:
Post a Comment