கீர்த்தனை 157 - என்னையும் உமதாட்டின்
என்னையும் உம தாட்டின் மந்தையோ
டேற்றுக் காத்திடும் யேசுவே
ஏற்றுக் காத்திடும் ஏசுவே எனை
ஏற்றுக் காத்திடும் ஏசுவே
1. வாசலாகவே இருக்கிறேன் எனால்
வந்தவன் மனம் நொந்திடான் - வெகு
நேசமாகவே வாழ்வான் என்ற நல்
நிமலனே எனை சேர்த்திடும்
2. ஜயிருபது ஆட்டினில் ஒன்று
அகன்றிட மனம் உகந்து கோன் - அதை
மெய்யதாகவே தேடுவான் என்ற
மேய்ப்பரே எனைச் சேர்த்திடும்
3. நல்ல மேய்ப்பன் நான் என மொழிந்த என்
நாதனே ஞான போதனே - ஜீவ
புல்லுள்ள ஸ்தலந் தன்னில் கொண்டெனைப்
போஷித்து முசிப்பாற்றிடும்
4. மேய்ப்பராகவே இருக்கிறீர் எந்தன்
மேய்ச்சலும் நீர் தாமலோ - ஞான
வாய்ப்புள்ள சத்ய மறையில் மேய்ந்து நான்
வளர்ந்திட அருள் புரிந்திடும்
5. அன்புடைய மெய் மேய்ப்பராயிருந்
தாட்டுக்காய் சொந்த ஜீவனை - வெகு
இன்பமாகவே ஈந்து மீட்ட நல்
ஏசுவே எனை சேர்த்திடும்

No comments:
Post a Comment