கீர்த்தனை 281 - அதிகாலையில் உம்மைத் தேடுவேன்
அதிகாலையில் உமைத் தேடுவேன் முழுமனதாலே
தேவாசீர்வாதம் பெற நாடுவேன் ஜெப தபத்தாலே
இதுகாறும் காத்த தந்தை நீரே
இனிமேலும் காத்தருள் செய்வீரே
பதிவாக உம்மிலே நான் நிலைக்கவே
பத்திரமாய் எனை உத்தமனாக்கிடும் தேவே!
1. போன ராமுழுவதும் பாதுகாத்தருளின போதா!
எப்போதும் எங்களுடன் இருப்பதாய் உரைத்த நல் நாதா!
ஈனப் பாவிக்கேது துணை லோகிலுண்டு பொற்பாதா?
எனக்கான ஈசனே! வான ராசனே!
இந்த நாளிலும் ஒரு பங்கமில்லாமல் காரும் நீதா!
2. பல சோதனைகளால் சூழ்ந்து நான் கலங்கிடும் போது
தப்பாது நின் கிருபை தாங்கிட வேணும் அப்போது
விலகாது என் சமூகம் என்ற வாக்கில் தவறேது?
விசுவாசங்கொண்டு மெய்ப்பாசமூண்டிட
விக்கினம் யாவிலும் வெற்றி காணுவேன் மலைவேது?
3. நரர் யாவர்க்குமுற்ற நண்பனாய் நடந்திட வையே! – தீ
நாவின் பாவமற நன்மைகள் மொழிந்திடச் செய்யே!
பரலோக ஆவியை நல் மாரி போலெனிலே பெய்யே!
புகழார நாதனே! வேத போதனே! பூரணமாய் உனைப்
போற்றுவேன் தினம் தினம் மெய்யே!
***********************************************************


No comments:
Post a Comment