Monday, August 4, 2025

கீர்த்தனை 212 - வேத புத்தகமே

கீர்த்தனை 212 - வேத புத்தகமே









வேத புத்தகமே, வேத புத்தகமே,
வேத புத்தகமே, விலை பெற்ற செல்வம் நீயே.

1. பேதைகளின் ஞானமே, – பெரிய திரவியமே,
பாதைக்கு நல்தீபமே, – பாக்யர் விரும்பும் தேனே! 

2. என்னை எனக்குக் காட்டி – என் நிலைமையை மாற்றி,
பொன்னுலகத்தைக் காட்டி – போகும் வழி சொல்வாயே. 

3. துன்பகாலம் ஆறுதல் – உன்னால்வரும் நிசமே
இன்பமாகும் சாவென்றாய் – என்றும் நம்பின பேர்க்கே. 

4. பன்னிரு மாதங்களும் – பறித்துண்ணலாம் உன் கனி;
உன்னைத் தியானிப்பவர் – உயர்கதி சேர்ந்திடுவார்


No comments:

Post a Comment