கீர்த்தனை 252 - ஐயனே இவர்க்காசி

ஐயனே! இவர்க்காசி ஈகுவாய்
மெய்யாய் உனை சார – என்றும்
பொய்யாமிவ் வுலகாசையை விட்டு
மெய்யாய் உனை சார – என்றும்
1. பாவமும் ஜெகஜாலமும் விட்டுப்
பனுவலுரைப்படியே (வேத உரை) - வெகு
ஆவலாயுனது அருளினாலுயிர்
அடையக் கதியடைய – என்றும்
ஐயனே! இவர்க்காசி ஈகுவாய்
மெய்யாய் உனை சார – என்றும்
2. நற்றுதி செய்யும் பக்தராய் உந்தன்
பொற்றாளிணை போற்றி! – ஓங்கு
சற்குணமும் மெய்வாழ்வுமே பெற்று
சான்றோர் நெறி சார – என்றும்
ஐயனே! இவர்க்காசி ஈகுவாய்
மெய்யாய் உனை சார – என்றும்
3. இன்று தொட்டு இவர் என்றுமே உனை
சென்றே எங்கும் கூறி – பயன்
நன்றி பெற்று உயர் வென்றியுற்று இனி
ஒன்றி உயர்ந்தோங்க – என்றும்
ஐயனே! இவர்க்காசி ஈகுவாய்
மெய்யாய் உனை சார – என்றும்
4. அன்று சீடராய்ப் பன்னிருவரை
அழைத்தாய் தயை விளைத்தாய் - இவர்
என்றும் சபையில் ஒன்றிவைகிட (இணைந்திருக்க)
நின்றுன் கிருபை ஈவாய் – என்றும்
ஐயனே! இவர்க்காசி ஈகுவாய்
மெய்யாய் உனை சார – என்றும்
பொய்யாமிவ் வுலகாசையை விட்டு
மெய்யாய் உனை சார – என்றும்
****************************
No comments:
Post a Comment