கீர்த்தனை 396 - புது வாழ்வு நமக்குப் புதுவாழ்வு
புது
வாழ்வு நமக்குப் புதுவாழ்வு – இது
பெருவாழ்வு
கிறிஸ்து தரும்வாழ்வு
1. பிறந்தவர் இறப்பது பொது மரபு – இங்கு
இறந்தவர்
எழுவதோ புதுச்சிறப்பு
இறைவனின்
திருமகன் உயிர்த்தெழுந்தார் – கொடும்
மரணத்தின்
பிடியினைத் தகர்த்தெறிந்தார்!
2. கல்லறை உலகினில் பல உண்டு – அவை
சொல்லிடும்
கதைகளில் கனிவுண்டு
வல்லவர்
இயேசுவின் கல்லறையோ – அவர்
இல்லையே
என்னிடம் என்றிடுதே!
3. இயேசுவின் உயிர்த்தெழல் பெருநிகழ்ச்சி – அவர்
நேசரின்
வாழ்விலும் வரும் நிகழ்ச்சி
நாசமோ
மோசமோ நமக்கில்லை – விசு
வாசிகள் தமக்கு இறப்பில்லை.

Thanks for the song sheet with stanzas
ReplyDelete