Tuesday, July 2, 2024

கீர்த்தனை 013 - தோத்திரம் புகழ் கீர்த்தனம்

கீர்த்தனை 013 - தோத்திரம் புகழ் கீர்த்தனம்

எழுதியவர் : மரியான் உபதேசியார்







தோத்திரம் புகழ் கீர்த்தனம் ஜெய சோபனம் உமக்கையா - துதி
சொல்லவும் தீதை வெல்லவும் அருள் சூட்டுவீர் கிறிஸ்தையா
 
கோத்திரவழி சிறந்த யூத நல் கொற்றவா தேவபாலா
மனுவேலா மறைநூலா செங்கோலனு கூலா
 
1. எந்தனை மீட்க நீர் இந்த உலகினில் வந்து பிறந்தீர் நன் மனுவாய் - மறை
ஏற்றித் தினம் எனை ஆற்றிநன் மொழியால் தேற்றினீர் முற்றிலும் தனுவாய்
நிந்தை அடைந்து மெய்ச் சொந்த உதிரத்தைச் சிந்தினீர் எத்தனை பரிவாய் தேவ
நீதியும் விளங்க செய்து பவமனு சாதிக்கிரங்கி நற்குருவாய்
நின்றீரே நடுவராய் நின்றீரே தீதை எலாம்
கொன்றீரே பிசாசையும் வென்றீரே ஜெயம் கொண்டீரே நித்திய
 
2. சுத்த சுவிசேஷ சத்தியமொழியை வித்தரிக்க வரம்தாரும் - நேய
சூரிய கிரண வீரியத்தால் எனக் காரோக்கியம் அருள்கூரும்
நித்தம் எனைத் தேவ பத்தியில் நடத்தி சித்தம் இரங்கிக் கண்பாரும் - கரம்
நீட்டிக் கிருபையை சூட்டிக் கவலையை ஓட்டி என் துயரைத் தீரும்
நில்லும் ஐயா என் பக்கத்தில் நில்லும் ஐயா தினம் நலம்
சொல்லும் ஐயா தீயோன் தனை வெல்லும் ஐயா தீதைக்
கொல்லும் ஐயா துய்யா
 
3.  நித்தியஜீவனைப் பெற்றும் மோடிருக்க சுத்தி கரித்தென்னை
ஆளும் - பவ
நிந்தையோ டென் சுய கந்தை அகற்றி மெய் விந்தைக் கிருபையால் சூழும்
சத்திய வசனவித்தால் எனை ஜெனிப்பித் தென் மனதினில் வாழும் - பதம்
சாற்றித் தினம் உமைப் போற்றிப் பணிந்திடத் தேற்றி எனை அரசாளும்
சற்குருவே கிறிஸ்தெனும் சற்குருவே ஜீவன்உள
சொற்குருவே நித்யானந்த நற்குருவே பரப் பொற்குருவே தேவே
***********************************************

No comments:

Post a Comment