கீர்த்தனை 410 - மலை மா நதியோ
மலைமா நதியோ மிகு
ஆழ் கடலோ
மருள் சூழும் கானக வனமோ – எங்கும்
மீட்பர் சிலுவை சுமப்பேனே
1. பள்ளம்
மேடு தடை தாண்டியே
பசாசின் கண்ணிக்கு நீங்கியே
உள்ளார்வத்துடன் விண் பார்வையுடன் – நான்
மெள்ள மெள்ள நடந்தே - எந்தன்
மீட்பர் சிலுவை சுமப்பேனே
2. இன்னல்
துயர் பிணி வாதையில்
ஈனரெனைத் தாக்கும் வேளையில்
துன்பம் களைந்தே துயரம் ஒழிந்தே – நான்
தூயன் பாதையில் ஊர்ந்தே - அவர்
தூய சிலுவை சுமப்பேனே
3. பூலோக
மேன்மை நாடிடேன்
புவிமேவும் செல்வம் தேடிடேன்
சீலன் சிலுவை சிறியேன் மேன்மை – என்
ஜீவன் வழி மறை இயேசுவே – அவர்
ஜீவ சிலுவை சுமப்பேனே
*********************************************************


No comments:
Post a Comment