கீர்த்தனை 227 - ஜீவ வசனம் கூறுவோம்
ஜீவ வசனம் கூறுவோம், சகோதரரே;
சேர்ந்தே எக்காளம் ஊதுவோம்.
பாவிகள் மேலுருகிப் பாடுபட்டு மரித்த
ஜீவாதிபதி யேசு சிந்தை மகிழ்ந்திடவே.
ஜீவ வசனம் கூறுவோம், சகோதரரே;
சேர்ந்தே எக்காளம் ஊதுவோம்.
1. பாதகப் பேயின் வலையில்,-ஐயோ! திரள்பேர்
பட்டு மடியும் வேளையில்;
பேதமை யோடு பிடிவாத மருள் மிகுந்து
வேதனை தானடையப் போவோர் கதி பெறவே.
ஜீவ வசனம் கூறுவோம், சகோதரரே;
சேர்ந்தே எக்காளம் ஊதுவோம்.
2. காடுதனிலே அலைந்தே, கிறிஸ்து யேசு
கர்த்தன் சேவையில் அமர்ந்தே;
நாடு, நகர், கிராமந் தேடி நாம் பெற்றடைந்த
நல்ல ஈவு வரங்கள் எல்லாருங் கண்டடைய.
ஜீவ வசனம் கூறுவோம், சகோதரரே;
சேர்ந்தே எக்காளம் ஊதுவோம்.
3. விண்ணின் மகிமை துறந்தார்,-கிறிஸ்து நமை
மீட்கக் குருசில் இறந்தார்;
மண்ணின் புகழ், பெருமை எல்லாம் தூசு குப்பை என்
றெண்ணிச் சிலுவைதனை எடுத்து மகிழ்ச்சியோடு.
ஜீவ வசனம் கூறுவோம், சகோதரரே;
சேர்ந்தே எக்காளம் ஊதுவோம்.
4. பூலோகம் எங்கும் நமையே, கிறிஸ்து நாதர்
போகச் சொல்லி விதித்தாரே;
காலமெல்லாம் உம்மோடு கூடயிருப்பேன் என்ற
கர்த்தன் வாக்கை நினைந்து எத்தேசமுந் திரிந்து.
ஜீவ வசனம் கூறுவோம், சகோதரரே;
சேர்ந்தே எக்காளம் ஊதுவோம்.
பாவிகள் மேலுருகிப் பாடுபட்டு மரித்த
ஜீவாதிபதி யேசு சிந்தை மகிழ்ந்திடவே.
ஜீவ வசனம் கூறுவோம், சகோதரரே;
1. பாதகப் பேயின் வலையில்,-ஐயோ! திரள்பேர்
பட்டு மடியும் வேளையில்;
வேதனை தானடையப் போவோர் கதி பெறவே.
ஜீவ வசனம் கூறுவோம், சகோதரரே;
2. காடுதனிலே அலைந்தே, கிறிஸ்து யேசு
கர்த்தன் சேவையில் அமர்ந்தே;
நல்ல ஈவு வரங்கள் எல்லாருங் கண்டடைய.
ஜீவ வசனம் கூறுவோம், சகோதரரே;
3. விண்ணின் மகிமை துறந்தார்,-கிறிஸ்து நமை
மீட்கக் குருசில் இறந்தார்;
றெண்ணிச் சிலுவைதனை எடுத்து மகிழ்ச்சியோடு.
ஜீவ வசனம் கூறுவோம், சகோதரரே;
4. பூலோகம் எங்கும் நமையே, கிறிஸ்து நாதர்
போகச் சொல்லி விதித்தாரே;
கர்த்தன் வாக்கை நினைந்து எத்தேசமுந் திரிந்து.
ஜீவ வசனம் கூறுவோம், சகோதரரே;

No comments:
Post a Comment