கீர்த்தனை 095 - உந்தன் ஆவியே
உந்தன் ஆவியே ஸ்வாமி எந்தன் மீதினில்
வந்து சேரவே அருள் தந்து காவுமே
1.இந்த மானிடர் வினை தந்த சாபமும்
நிந்தை யாவுமே பட வந்த ஏசுவே
2.சத்ய ஆவியை சீடர்க்கித்தரை விட
சித்தமாய் உரை புரி நித்ய தேவனே
3.பெந்தேகோஸ்தெனும் மா சிறந்த நாளிலே
விந்தை ஆவியின் அருள் தந்த நேர்மையே
4.மதி மயக்குதே பேயும் மன தியக்குதே
அதிகமாய் கடல் அலை அறைந்து பாயுதே
5.தாசன் யானுமே புகழ் வீசும் வாய்மையே
வாசமாகவே அருள் நேச தேவனே
**************************************************************************

No comments:
Post a Comment