கீர்த்தனை 201 - ஏனோ பல நினைவாலும் நீ
ஏனோ பல நினைவாலும்
நீ உன்னை அலைக்கழிப்பாய்
மன்னர்கள் மன்னவனாகிய யேசு உன்
மன்னவராய் இருக்கையிலே
1.அன்னையிடத்துருவாய் உன்னை
அமைத்த தந்தை அல்லவோ? பின்னும்
ஆகாரமும் உடையும் ஜீவனும்
அளிப்பதவர் அல்லவோ?
2.மாதானவள் சேயை ஒரு
வேளை மறந்தாலும் – உன்னை
மறவோம் ஒருக்காலும் என
வார்த்தை கொடுத்தாரே
3.இஸரேலரைக் காப்போர் உறங்கிடுவார்
என நினையேல் – அவர்
நிசமாக உன் வல பாகத்தில்
நிழல் ஆவர் என்றறிவாய்
4.சிங்கங்கள் பட்டினியாய் இருக்கக்
கண்டேன் தேசம் எங்கும்
சுற்றிப் பார்த்தும் – தேவ
சேயர்கள் பட்டினியாகக் காணேன்
என்ற திவ்ய உரையும் பொய்யாமோ?
5. தேவ
பிதா நின் பிதாவும் இயேசு
நின் சிநேகிதரும் சுத்தாவி – நின்றன்
தேற்றர வாளனும் ஆவதைப்
பார்க்கிலும் தேவை நினக்
கொன்றும் இல்லையே.

No comments:
Post a Comment