Sunday, March 24, 2024

கீர்த்தனை 107 - அருமருந்தொரு கற்பக மருந்து

 

கீர்த்தனை 107 - அருமருந்தொரு கற்பக மருந்து

பாடல் : த. ஐயாதுரை

 

A recording of The Emmanuel Church Choir, Thangam Colony, Anna Nagar, Chennai during the Sunday Service on 18-02-2024 

************  




அருமருந்தொரு சற்குரு மருந்து

அகிலமீடேற இதோ திவ்ய மருந்து

 

1. திருவளர்தெய்வம் சமைத்த மருந்து

தீனர் பாவப் பிணியைத் தீர்க்கு மருந்து

 

2. இருதய சுத்தியை ஈயுமருந்து

இகபரசாதனம் ஆகும் மருந்து

 

3. ஆத்ம பசி தாகம் தீர்க்கு மருந்து

அவனியோர் அழியா கற்பக மருந்து

 

4. சித்த சமாதானம் உண்டாக்கு மருந்து

ஜீவன்முத்தி தருஞ்சேணுள்ள மருந்து

 

5. பணமில்லை இலவசமான மருந்து

பாவிகளுக் கெளிதில் ஏற்படு மருந்து

 

6. என்றும் அழியாத தேவருள் மருந்து

என் பவநீக்கும் யேசு நாதர் மருந்து

****************************

No comments:

Post a Comment