கீர்த்தனை 208 - ஏற்றுக்கொண்டருளுமே தேவா
ஏற்றுக்கொண்டருளுமே தேவா! - இப்போ
தேழையேன் ஜெபத்தை இயேசுவின் மூலம்
ஏற்றுக்கொண்டருளுமே
1. சாற்றின ஆதி ஆயத்த ஜெபமும்
சாந்தமாய் ஜெபித்த பாவ அறிக்கையும்
தேற்றிக் கொண்டருளும் மன்னிப்பின் மருவும்
திவ்விய பாதத்தில் வைக்கிறேன் ஸ்வாமி
ஏற்றுக்கொண்டருளுமே
2. குறைவுண்டு இதிலே அருமைப் பிதாவே
குற்றம் மன்னித்திடும் யேசுவின் மூலம்
முறைப்படி கேட்க நான் தெரியாத பாவி
முழுதும் மேசையாமேல் வைக்கிறேன் ஸ்வாமி
ஏற்றுக்கொண்டருளுமே
3. மறுரூப ஆவி வேண்டுமென் ஸ்வாமி
மனமெல்லாம் புதிதாய் ஆக்கிடும் ஸ்வாமி
சிறுமைப்பட்டடியேன் கேட்கிறேன் ஸ்வாமி
தேற்றிடும் புது பெலன் ஊற்றிடும் ஸ்வாமி
ஏற்றுக்கொண்டருளுமே
4. விசுவாசம் பெருகி நிலைத்திடச் செய்யும்
வெளிப்படும் மறைபொருள் பலப்படச் செய்யும்
சிசுவைப்போல் மறுபடி பிறந்திடச் செய்யும்
தேவாவி என்னுள்ளம் தங்கிடச் செய்யும்
ஏற்றுக்கொண்டருளுமே தேவா! - இப்போ
தேழையேன் ஜெபத்தை இயேசுவின் மூலம்
ஏற்றுக்கொண்டருளுமே
******************************************************************

No comments:
Post a Comment