Friday, June 20, 2025

கீர்த்தனை 314 - யேசுவுக்கு நமது தேசத்தை

 கீர்த்தனை 314 - யேசுவுக்கு நமது தேசத்தை



யேசுவுக்கு நமது தேசத்தைச் சொந்தமாக்கப்

பாசமாய் முயல்வோமே, தாசரே

யேசுவுக்கு நமது தேசத்தைச் சொந்தமாக்கப்

பாசமாய் முயல்வோமே


தேசொளி ஞாலமெங்கும் வீசும் யேசுவில் விசு

வாசம் வைத்தன்பின் சுவிசேஷத்தை ஏந்தி 

யேசுவுக்கு நமது தேசத்தைச் சொந்தமாக்கப்

பாசமாய் முயல்வோமே


1. கங்காநதி துவக்கி கன்னியாகு மரிவரை

எங்குமே யேசுராஜா ஆளவே - அவர்

சிங்காரக்கொடி மேலிலங்கக் குடிகளெல்லாம்

மங்கா சந்தோஷ முற்று வாழவே மன்னன் 


2. வித்தை பூர்வீக நூல்கள் தத்துவ ஞானத்துக்கு

மெத்தப் பேர்போன இந்திய தேசமாம் – இதில்

சத்தியமாக வந்த நித்தியர் யேசுவின் பரி

சுத்த பரம ஞானம் ஜோதியாய்த் தோன்ற 


3. தீய மாமூல் வழக்கம் ஓய, வீண்பக்தி நீங்க

மாய கோட்பாடு முற்றும் மாறவே - யேசு

தூயன் சத்தியவேத நியாயவிதிகள் உள்ளம்

பாயநம் நாட்டார் குணமாகவே, வல்ல 


4. நம்மை வெறுத்து யேசுநாதனுக் கொப்புவித்து

செம்மையுடன் உழைத்து சேவிப்போம் - அவர்க்

குண்மை பாராட்டி நமக்குள்ள யாவும் படைத்து

நம்மாலியன்றளவு முயல்வோமே என்றும் 


*******************************************************


No comments:

Post a Comment