Tuesday, April 22, 2025

கீர்த்தனை 323 - வானோர் பூவோர் கொண்டாட

கீர்த்தனை 323 - வானோர் பூவோர் கொண்டாட


**********
Stanzas 1,2,4&6
**********



வானோர் பூவோர் கொண்டாட
மனுவேலுயிரோ டெழுந்தார் ஜெயமே

தீனதயாளன் திருமறைநூலன்

திரிபுவனங்களாள் செங்கோலன்

(மூவுலகை ஆளும் நீதியரசன்)


ஞானசு சீலன் நரரனுகூலன்

நடுவிடவே வருபூபாலன்

(திரித்துவத்தில் நடுவரான மணமகன் இயேசு)


1. அலகையை ஜெயித்தார் அருள்மறை முடித்தார்

அருலமலர்க்கா காவலை ஒழித்தார்

நிலைதிரை (தேவாலயத் திரைச்சீலை) கிழித்தார்

தடைச்சுவரிடித்தார் (பாவமெனும் தடுப்புச்சுவர்)

நேராய்த் தரிசனந்தர விடுத்தார்

 

2. செத்தோ ருயிர்த்தார் திருநகர் பூத்தார்*

தேடற் கரியதோர் காட்சிவைத்தார்

மற்றோர் பார்த்தார் மலைவுகள் தீர்த்தார்

மரித்தோர் முதற்பலனாய் செழித்தார்

 

*மரித்த பரிசுத்தவான்கள் உயிர்த்தெழுந்து எருசலேமில் காணப்பட்டனர்.  (மத்தேயு 27: 52, 53)


3. அடியவர் கண்டார் ஆர்துயர் விண்டார்
அருமறைக் கருத்தாய்ந்தே நின்றார்
மடமையகன்றார் மயக்கமே கொன்றார்
வானானந்தமே மனங்கொண்டார்

4. மகதலனாளு மதி சூசன்னாளும்
மயங்கியழுத யோ வன்னாளும்
மகவிருவர் தருசா லொமித்தாயும்
மரை மலரடிதொழு தேத்தினரே

5.  எம்மாவூர் சீடரி ருவர்க்குந் தோமா
இலதுபதின் மருக்குமே காட்சி
நன் மனதுடனே பதினொருவருக்கும்
நடுவகத்தே வருமாசூட்சி

6.  மகதலனாட்கு மற்ற மங்கையர்க்கும்
மகத்துவத்தே தரிசன மளித்தார்
பேதுரு தனித்தும் யாக்கோபு தனித்தும்
பிரத்தியேகத்தில் தரிசித்தனரே

7. கலிலே யாக்கடலில் எழுவரும் பார்த்தார்
காட்சி மலையஞ் ஞூறுபேர் பார்த்தார்
உலை எருசலமில் சீடரைச் சேர்த்தார்
ஒலிவ மலைமேல் திரள்பேர் பார்த்தார்.

No comments:

Post a Comment