கீர்த்தனை 206 - ஜெப சிந்தை எனில் தாரும்
ஜெப சிந்தை எனில்
தாரும் தேவா – என்னை
அபயமென்றுனக்குக்கை
அளித்தேன் பொற்பாதா
ஜெப சிந்தை எனில்
தாரும் தேவா
1. உண்மை
மனதோடுன்னைக் கெஞ்ச
உலகெண்ணமெல்லாம் அகற்றி
உரிமையே மிஞ்ச
தொன்மை ஆயக்காரன்
போலஞ்ச
பவ
தோஷமகலத் திருரத்தம்
உள்ளிஞ்ச
2. இடைவிடாமல்
செய்யும் எண்ணம்
என்
இதயத்தில் உதயமாய்
இலங்கிடப் பண்ணும்
சடமுலகப் பேயை
வெல்லும்
நற்சாதக முண்டாகத்
தயைசெய் என்னுள்ளம்
3. ஊக்கமுடன்
ஜெபம் செய்ய
தகாநோக்கமெல்லாம் கெட்டு
நொறுங்கியே நைய
பேய்க்கண மோடுபோர்
செய்ய
நல்
ஆக்கம் எனில்
தந்து ஏக்கம்
தீர்ந்துய்ய

No comments:
Post a Comment