கீர்த்தனை 300 - தோத்திரப் பண்டிகை ஆசரிப்போமே
தோத்திரப் பண்டிகை ஆசரிப்போமே
தூயகம் ஊறிய பக்தியால் நாமே
1. பாத்திரம் இதுவெனப் பகர்உடல் பொருளாவி
பரமனுக் கர்ப்பணம்செய் பரிவு நிறைய மேவி
தோத்திரப் பண்டிகை ஆசரிப்போமே
2. பனித்துளி நிலத்தினைப் பண்படுத்தினதன்றே
பகருமுகில் கொழுமைப் படுத்திய தெண்ணி நன்றே
தோத்திரப் பண்டிகை ஆசரிப்போமே
3. கடவுளே பயிருக்குக் கனமழை பெய்வித்தாரே
காங்கையால் கதிர்வளம் கதிக்கவும் உய்வித்தாரே
தோத்திரப் பண்டிகை ஆசரிப்போமே
4. நெஞ்சத்தில் தெய்வஅன்பாம் நிதிநிகர் விதைபெய்து
நித்திய சமாதானம் நிறுவ விண்ணப்பம்செய்து
தோத்திரப் பண்டிகை ஆசரிப்போமே
5. இறைவன் இரத்தக் கையால் இரட்சண்யம் அருள்வித்தை
இதயத்தில் விதைத்ததற் கின்குண பலன்வைத்து
தோத்திரப் பண்டிகை ஆசரிப்போமே
தூயகம் ஊறிய பக்தியால் நாமே
***********************************************

No comments:
Post a Comment