கீர்த்தனை 130 - பாவி இன்றே திரும்பாயோ?
பாவி இன்றே திரும்பாயோ? நேச
ஆவியின் சத்தம் கேளாயோ?
மேவி தயை நிரம்பி ஏவி உனை விரும்பிக்
கூவி அழைக்கையிலே தாவி யேசுவை நோக்கி
பாவி இன்றே திரும்பாயோ?
1. பாவம் தொடர்ந்து செல்லுமே - பாவ
சாபம் அடர்ந்து கொல்லுமே - உனின்ப
லாபம் எல்லாமே சாபம் காலமிதுவே காலம்
தாபம் உளவுன் யேசு மா பரிதாபம் கண்டு
பாவி இன்றே திரும்பாயோ?
2. எத்தனை போதனை பெற்றாய் - ஐயையோ!
சுத்தமாய் சாதனை அற்றாய் - என்றாலும்
அத்தனை பாவத்தையும் முற்றுமாக வெறுத்து
அத்தனே தத்தம் செய்தேன் நித்தமும் காவுமென்று
பாவி இன்றே திரும்பாயோ?
3. கல்வாரியில் தொங்கினோர் யார்? - உனக்
கல்லோ நேசர் ஏங்கினார் பார்! - இன்னும்
பொல்லா மனதுடனே கல்போல் கடினமாகி
சொல்வோரையும் நிந்தித்து எல்லாக் கேட்டுக்குள்ளான
பாவி இன்றே திரும்பாயோ?
4. நிலையின்றலைகின்றோரே - ரத்த
விலை மதியாமல் சென்றோரே - போதும்
மலையாமல் (தயங்காமல்) யேசுவிடம் தொலையாத கவலை சொல்லி
உலையா (நீங்காத) நம்பிக்கை வைத்து நிலையான ரட்சைபெற
பாவி இன்றே திரும்பாயோ? நேச
ஆவியின் சத்தம் கேளாயோ?
பாவி இன்றே திரும்பாயோ?
**************************************************

No comments:
Post a Comment