கீர்த்தனை 394 - உயிர்த்தெழுந்த ஆண்டவர்
உயிர்த்தெழுந்த ஆண்டவர் உலகை வென்றவர்
உள்ளம் சோரும் வேளை வந்து உதவி செய்பவர்
1. முடிந்தது இவ்வாழ்வு என்னும் முன்னை பயம் வேண்டாம்
முடிவில் தொடரும் துளிரில் வாழ்வின் புதுமை பின் காண்போம்
2. மரணம் கண்டோர் மறைந்தார் என்ற மனதுக்கம் வேண்டாம்
மரணம் வென்ற மன்னர் இயேசு நம்மோடிருக்கிறார்
3. கல்லறையே கடைசிவீடு என்ற நிலைவேண்டாம்
கல்புரண்ட காட்சிதனை கணமே எண்ணுவோம்
4. புதிய வானம் புதிய பூமி தோன்றும் நாளதில்
புவியின் கண்ணீர் கவலை நோவு சாவு ஓய்ந்திடும்
*********

No comments:
Post a Comment