கீர்த்தனை 190 - நான் விடமாட்டேன்
நான் விடமாட்டேன் என் இயேசுவை
வான் புவியாவும் போனாலும்
-அத்தால்
மயங்கியே ஒருக்காலும் மெய்யாய்
1. முந்தியென் மேலன்பு கூர்ந்தார் - இங்கே
முக்யநன்மைதரச் சேர்ந்தார் - தீய
எந்தனுக்காய்த் தம்மை யீந்தார் - எனக்
கெண்ணருநன்மைகள் நேர்ந்தார் - மெய்யாய்
2. வானலோகந்தனைத் துறந்தார் - ஏழை
மானிடனாகவே பிறந்தார் - மிக்க
ஈனனெனக்காக இறந்தார் - பேய் மேல்
எந்தனுக்காய் ஜெயம் சிறந்தார் - மெய்யாய்
3. மேசியாவுக் கிணையுண்டோ? அவர்
வேதத்துக்கொப்பு கற்கண்டோ? எனின்
நேசர் சமுகம் பூச்செண்டோ? இந்த
நீசனதில் மொய்க்கும் வண்டோ? - மெய்யாய்
4. லோகமெனை உதைத்தாலும் - பொல்லா
லோபிகள் துஷ்டர் மொய்த்தாலும் - பசி
தாகநோயும் வதைத்தாலும் - இந்தத்
தாரணியோர் சிதைத்தாலும் - மெய்யாய்

No comments:
Post a Comment